Categories
கிரிக்கெட் விளையாட்டு

IPL 2021 :மும்பை அணியில் இணைந்தார் ….. ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் ….!!!

ஐபிஎல் 2021 தொடரின் இரண்டாவது பகுதி ஆட்டம் நாளை முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுகிறது .இதில் முதல் ஆட்டத்தில் சிஎஸ்கே – மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த நிலையில் மும்பை இந்திய அணியின் ஆலோசகராக ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் அணி வீரர்களுடன் இணைந்துள்ளார் .ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு 2013-ம் ஆண்டு முதல் மும்பை இந்தியன்ஸ் அணியின் ஆலோசகராக சச்சின் டெண்டுல்கர் பணியாற்றி வருகிறார்.

இதில் சென்ற வருடம் கொரோனா தொற்று பரவல்  காரணமாக சச்சின் டெண்டுல்கர் அமீரகத்திற்கு செல்லவில்லை .அதோடு இந்த வருடம் கொரோனா தொற்றால்  பாதிக்கப்பட்டதால் இந்தியாவில் நடைபெற்று வந்த ஐபிஎல் தொடரின் போதும் அவர் மும்பை அணியில் பங்கேற்கவில்லை. இந்த நிலையில் 6 நாட்கள் தனிமைப்படுத்துதலுக்கு பிறகு  மும்பை இந்தியன்ஸ் அணியுடன் சச்சின் டெண்டுல்கர் இணைந்துள்ளார்.

Categories

Tech |