Categories
கிரிக்கெட் விளையாட்டு

IPL 2021 : போட்டியை நேரில் காண ரசிகர்களுக்கு அனுமதி ….? வெளியான முக்கிய தகவல் …!!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்க உள்ள  ஐபிஎல் தொடரை  காண ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

14-வது ஐபிஎல் சீசன் தொடர் கடந்த ஏப்ரல் மாதம் 9-ம் தேதி முதல் இந்தியாவில் தொடங்கி நடைபெற்று வந்தது. ஆனால் போட்டியின்போது ஒரு சில வீரர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டதால் போட்டி  பாதியில் நிறுத்தப்பட்டது. இதனால் மீதமுள்ள ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 19-ஆம் தேதி முதல் தொடங்கி அக்டோபர் 15-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்காக சிஎஸ்கே, மும்பை இந்தியன்ஸ் உட்பட பல அணிகள் அமீரகத்துக்கு புறப்பட்டுச் சென்றுள்ளனர்.

இந்த நிலையில் மீதமுள்ள ஐபிஎல் போட்டியை  காண ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து அமீரக கிரிக்கெட் வாரிய செயலாளர் முபாஷிபர் உஸ்மானி  கூறும்போது,” பிசிசிஐ மற்றும் ஐசிசி-யிடம் இது தொடர்பான பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம் .மேலும் அமீரகத்தில் கிரிக்கெட் ரசிகர்கள் இருக்கின்றன. இதனால் ஐபிஎல் தொடரின்போது 60 சதவீத ரசிகர்களுக்கு அனுமதி அளிக்க ஐசிசி மற்றும் பிசிசிஐ-யுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம் ,”என்று அவர் கூறினார்.

Categories

Tech |