ரசிகர்கள் மத்தியில் போட்டியை விளையாட மிகவும் ஆர்வத்துடன் இருப்பதாக கொல்கத்தா அணி கேப்டன் மோர்கன் கூறியுள்ளார் .
14 – வது ஐபிஎல் தொடரின் மீதமுள்ள போட்டிகள் வருகிற 19-ஆம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுகிறது. இந்நிலையில் போட்டியை காண பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனிடையே பார்வையாளர்கள் மத்தியில் போட்டியை விளையாட மிகவும் ஆர்வத்துடன் இருப்பதாக கொல்கத்தா அணியின் கேப்டன் மோர்கன் கூறியுள்ளார் .இதுகுறித்து அவர் கூறுகையில்,” நாங்கள் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் மீண்டும் ரசிகர்களை கொண்டிருப்பது நம்பமுடியாத உற்சாகத்தை அளித்திருக்கிறது .
ஈடன் கார்டனில் கொல்கத்தா ரசிகர்களின் கரகோஷங்களை கேட்க நீண்ட நேரம் ஆகிவிட்டது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக எங்களது சொந்த மைதானத்தில் அதை அனுபவிக்க முடியவில்லை . ஆனால் தற்போது அமீரகத்தில் அதை கேட்க முடியும் ” என்று அவர் கூறியுள்ளார் .இந்நிலையில் செப்டம்பர் 20ஆம் தேதி நடைபெற உள்ள போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றன.