காயம் காரணமாக மீதமுள்ள ஐபிஎல் தொடரில் இருந்து தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் விலகியுள்ளார்.
14-வது ஐபிஎல் சீசன் தொடரின் மீதமுள்ள போட்டிகள் வருகின்ற செப்டம்பர் 19-ஆம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்குகிறது. இதில் துபாயில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் -சிஎஸ்கே அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன .இந்நிலையில் ஆர்சிபி அணியில் சுழற்பந்து வீச்சாளரான தமிழகத்தை சேர்ந்த வாஷிங்டன் சுந்தர் கைவிரலில் ஏற்பட்ட காயத்தால் நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளார்.
கடந்த 2018- ஆம் ஆண்டில் ஆர்சிபி அணியில் இடம்பிடித்த வாஷிங்டன் சுந்தர் இதுவரை 32 போட்டிகளில் விளையாடி 19 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். இந்நிலையில் காயம் காரணமாக விலகிய சுந்தருக்கு பதிலாக பெங்கால் வேகப்பந்து வீச்சாளரான ஆகாஷ் தீப் ஆர்சிபி அணியில் இடம்பிடித்துள்ளார் .அதுமட்டுமில்லாமல் மீதமுள்ள ஐபிஎல் போட்டியில் ஆர்சிபி அணி 5 வீரர்களை தேர்வு செய்துள்ளது.