Categories
கிரிக்கெட் விளையாட்டு

IPL 2021: சரிவில் இருந்து மீளுமா மும்பை இந்தியன்ஸ் ….? பஞ்சாப் அணியுடன் இன்று மோதல் ….!!!

14-வது சீசன் ஐபில் தொடரில் இன்று நடைபெறும் 42-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்- பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீச்சை நடத்துகின்றன .

ஐபிஎல் 2021 சீசனின் இரண்டாவது பகுதி ஆட்டம் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் 42-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்- பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. இதுவரை 10 போட்டிகளில் விளையாடியுள்ள மும்பை அணி 4 வெற்றி ,6 தோல்வியுடன் புள்ளி பட்டியலில்  7-வது இடத்தை உள்ளது. அதேபோல் 10 போட்டிகளில் விளையாடியுள்ள பஞ்சாப் அணி 4 வெற்றி, 6 தோல்வியுடன் புள்ளி பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளது. இதில் நடப்பு சீசனில் இந்தியாவில் நடந்த ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடி வந்த மும்பை அணி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கிய இரண்டாவது பகுதி ஆட்டத்தில்  தொடர் தோல்வியை சந்தித்து வருகிறது.

இதையடுத்து இரண்டாம் பகுதி ஆட்டத்தில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்த பஞ்சாப் அணி, ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற்றது.இதனால் இன்றைய போட்டியில் அதை நம்பிக்கையுடன் பஞ்சாப் அணி களமிறங்கும்.  இதற்கு முன்பாக நடப்பு சீசனில் மும்பை – பஞ்சாப் அணிகளுக்கு இடையே நடந்த போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றது. அதேபோல் தொடர் தோல்வியிலிருந்து  மீளும் முனைப்புடன் மும்பை அணி களமிறங்கும் என்பதால் இன்றைய ஆட்டத்தில் கடும் போட்டி இருக்கும் என்பதால் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்திய நேரப்படி இப்போட்டி  இன்று இரவு 7.30 மணிக்கு அபுதாபியில் தொடங்குகிறது.

Categories

Tech |