நேற்று நடந்த பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பந்து வீச அதிக நேரம் எடுத்து கொண்டதால் ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சனுக்கு ரூபாய் 12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
14 – வது சீசன் ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது .இதில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் – ராஜஸ்தான் அணிகள் இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது .அதன்படி முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் குவித்தது .
இதன் பிறகு களமிறங்கிய பஞ்சாப் அணி இறுதியாக 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 183 ரன்கள் எடுத்து தோல்வியை சந்தித்தது. இதனால் ராஜஸ்தான் அணி 2 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது .இந்த நிலையில் பஞ்சாப் அணி இன்னிங்சில் பந்து வீச அதிகநேரம் எடுத்துக் கொண்டதால் ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சனுக்கு ரூபாய் 12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.