14-வது சீசன் ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 39-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றன.
14-வது சீசன் ஐபிஎல் தொடர் இந்தியாவில் கடந்த ஏப்ரல் 9-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வந்தது .ஆனால் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக போட்டிகள் ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் மீதமுள்ள ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது .இதில் இன்று நடைபெறும் 39-வது லீக் ஆட்டத்தில் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் ,ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன. இதுவரை 9 போட்டிகளில் விளையாடியுள்ள பெங்களூரு அணி 5 வெற்றி 4 தோல்வியுடன் புள்ளி பட்டியலில் 3-வது இடத்தில் உள்ளது.
அதேபோல் 9 போட்டிகளில் விளையாடியுள்ள மும்பை அணி 4 வெற்றி ,5 தோல்வியுடன் புள்ளி பட்டியலில் 6-வது இடத்தில் உள்ளது. இதற்கு முன்னதாக கொல்கத்தா ,சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூர் அணி தொடர் தோல்வியை சந்தித்துள்ளது .அதேபோல சென்னை மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு எதிரான ஆட்டத்திலும் தொடர் தோல்வியடைந்தது. இதனால் இன்றைய போட்டியில் தோல்வியில் இருந்து மீளும் முனைப்புடன் இரு அணிகளும் சம பலத்துடன் களமிறங்கும் என்பதால் இன்றையஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்திய நேரப்படி இப்போட்டி இன்று மாலை 7.30 மணிக்கு துபாயில் தொடங்குகிறது.