இங்கிலாந்து அணிக்கு எதிரான 5-வது டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா உட்பட 3 வீரர்கள் யு.ஏ.இ-க்கு சென்றுள்ளனர் .
இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வந்தது. இந்த டெஸ்ட் தொடர் 17-ம் தேதியுடன் முடிவடையும் வகையில் போட்டி அட்டவணை அமைக்கப்பட்டிருந்தது. இதன்பிறகு 19-ஆம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் தொடரின் 2-வது பகுதி ஆட்டங்கள் தொடங்க இருக்கின்றது . இந்நிலையில் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி பயிற்சியாளர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டதால் 5-வது டெஸ்ட் போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் ஐபிஎல் 2-வது பகுதி ஆட்டங்களில் விளையாட உள்ள வீரர்கள ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சென்று கொண்டிருக்கின்றன.
𝗖𝗔𝗣𝗧𝗔𝗜𝗡 Aala Re! 💙
Welcome home, Ro, Ritika and Sammy 🤩#OneFamily #MumbaiIndians #IPL2021 @ImRo45 @ritssajdeh pic.twitter.com/r8mrDocVvc
— Mumbai Indians (@mipaltan) September 11, 2021
இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ,பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவ், பந்துவீச்சாளர் பும்ரா ஆகிய வீரர்கள் இன்று இங்கிலாந்தில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கு புறப்பட்டனர். குடும்பத்துடன் சென்ற அவர்கள் அங்கு 6 நாட்கள் தனிமைப்படுத்தபட உள்ளன. இதன் பிறகு அணியுடன் இணைந்து அவர்கள் போட்டியில் விளையாட உள்ளனர். இவர்கள் 3 பேரும் சிறப்பு விமானம் மூலமாக யு.ஏ.இ-க்கு சென்றுள்ள நிலையில் ஆர்சிபி அணியின் கேப்டன் விராட் கோலி ,முகமது சிராஜ் ஆகிய இருவரும் நாளை யு.ஏ.இ-க்கு செல்கின்றனர்.