Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐபிஎல் 2021 : நான் கண்டிப்பா விளையாடுவேன் …. மீண்டும் அணிக்கு திரும்பும் ஷ்ரேயாஸ் …. டெல்லி அணிக்கு வந்த புது சிக்கல் ….!!!

மீதமுள்ள ஐபிஎல் போட்டியில் நிச்சயம் விளையாடுவேன் என்று  ஷ்ரேயாஸ் அய்யர் கூறியுள்ளார் .

ஐபிஎல் 2021 சீசனுக்கான போட்டி கடந்த ஏப்ரல் மாதம் இந்தியாவில் நடைபெற்று வந்தது. இந்த போட்டிக்கு முன்பாக இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் இந்திய அணியின் இடம்பெற்றிருந்த   ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டனான  ஷ்ரேயாஸ் அய்யருக்கு  தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதன் காரணமாக 14-வது ஐபிஎல் சீசனில் ஷ்ரேயாஸ் அய்யர்  பங்கேற்க மாட்டார் என அறிவிக்கப்பட்டது. இதனால் டெல்லி கேப்பிடல்ஸ் அணியில்  ரிஷப் பண்ட் கேப்டனாக நியமிக்கப்பட்டார். இவர்  தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணி சிறப்பாக விளையாடிய 6 போட்டிகளில் வெற்றி பெற்று தரவரிசை பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. ஆனால் ஐபிஎல் போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது ஒரு சில வீரர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டதால் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில் மீதமுள்ள போட்டிகள் வருகின்ற செப்டம்பர் மாதம் முதல் தொடங்கி அக்டோபர் வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது . இந்நிலையில் காயத்திலிருந்து முழுமையாக குணம் அடைந்துள்ள ஷ்ரேயாஸ் அய்யர் தற்போது நடைபெற உள்ள ஐபிஎல் போட்டியில் டெல்லி அணிக்காக மீண்டும் விளையாடுவேன் என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, “டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டன் பதவி குறித்து எனக்கு தெரியாது என்றும் ,அது உரிமையாளர்கள் கையில் தான் உள்ளது” என்றார். மேலும் அவர் கூறும்போது ,”டெல்லி அணி அபாரமாக விளையாடி தரவரிசையில் முதலிடத்தை பெற்றுள்ளது. என்னுடைய இலக்கு டெல்லி அணியை  வெற்றி பெறச் செய்து கோப்பையை வெல்ல வேண்டும் என்பதுதான் “என்று அவர் கூறியுள்ளார்.இந்நிலையில் இவருடைய வருகையால் டெல்லி அணியின் கேப்டனாக யாரை நியமிப்பது என்ற புதிய சிக்கல் டெல்லி அணி நிர்வாகத்திற்கு ஏற்பட்டுள்ளது .

Categories

Tech |