இன்று நடந்த ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் ஜடேஜா ஒரே ஓவரில் 37 ரன்களை அடித்து விளாசினார்.
இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதிக்கொண்டன. முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணி 19வது ஓவரில் 154 ரன்களை குவித்து இருந்தது. கடைசி 20வது ஓவரில் ஜடேஜா பேட்டிங் செய்ய, ஹர்சல் பட்டேல் பந்துவீசினார். இந்த ஓவரில் வீசிய முதல் 4 பந்துகளையும், ஜடேஜா சிக்ஸர்களாக அடித்து விளாசினார்.
3வது பந்தில் , நோ-பால்-க்கு பதிலாக வீசிய பந்தையும் சிக்ஸராக அடித்தார் மீதமுள்ள இரண்டு பந்துகளில் ஒரு பந்தில் 2 ரன்கள் எடுக்க கடைசி பந்தை சிக்சருக்கு தூக்கினார். இதனால் ஒரே ஓவரில் 37 ரன்களை ஜடேஜா குவித்தார். இதற்கு முன்பாக கிறிஸ் கெய்ல் ஒரே ஓவரில் 37 ரன்களை குவித்து இருந்தார். தற்போது அந்த இடத்தை, இன்றைய போட்டியின் மூலமாக ஜடேஜா சமன் செய்துள்ளார்.