Categories
கிரிக்கெட் விளையாட்டு

IPL 2022 :ஆர்சிபி அணிக்கு யாருப்பா கேப்டன் ….? 9 அணிகளும் சொல்லிட்டாங்க ….!!!

15-வது சீசன் ஐபிஎல் டி20 லீக் போட்டி வருகின்ற மார்ச் 26-ம் தேதி முதல் தொடங்கி மே 29-ம் தேதி வரை நடைபெறுகிறது.மேலும் நடப்பு  ஐபிஎல் சீசனில் புதிதாக லக்னோ ,அகமதாபாத் ஆகிய 2 அணிகள் இடம்பிடித்துள்ளன. இந்த புதிய அணிகளுக்கு லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் என பெயர் வைக்கப்பட்டுள்ளது.அதேசமயம் நடப்பு ஐபிஎல் தொடரில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்பதால்  போட்டி முறைகள் மாற்றம் செய்யப்பட்டு இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது. அதோடு மொத்தம் 70 லீக் ஆட்டங்கள் மும்பை மற்றும் புனேயில் நடைபெறவுள்ளது.இதனிடையே  பஞ்சாப் கிங்ஸ்அணியின் கேப்டனாக மயங்க் அகர்வால் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுவரை ஐபிஎல் தொடரில் 9 அணிகளுக்கு கேப்டன் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஒரே ஒரு அணியான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு மட்டும் இன்னும் கேப்டன் அறிவிக்கப்படாமல் உள்ளது .மேலும் கடந்த ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணிக்கு கேப்டனாக இருந்த  விராட் கோலி கேப்டன்சிலிருந்து விலகுவதாக ஏற்கனவே அறிவித்து இருந்தார்.இதனால் தென் ஆப்பிரிக்கா அணி வீரரான  டுபெலிசிஸ் ஆர்சிபி  அணிக்கு கேப்டனாக நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பழைய அணிகளில் கொல்கத்தா, பஞ்சாப் ஆகிய இரு அணிகளுக்கும் புதிய கேப்டன் நியமிக்கப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
9 அணிகளின் கேப்டன்கள் :
சென்னை சூப்பர் கிங்ஸ்- டோனி
மும்பை இந்தியன்ஸ்- ரோகித்சர்மா
டெல்லி கேப்பிட்டல்ஸ்- ரி‌ஷப்பண்ட்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்-ஸ்ரேயாஸ் அய்யர்
ராஜஸ்தான் ராயல்ஸ்-சஞ்சு சாம்சன்
பஞ்சாப் கிங்ஸ்- மயங்க் அகர்வால்
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்- லோகேஷ் ராகுல்
குஜராத் டைட்டன்ஸ்- ஹர்திக் பாண்ட்யா.

Categories

Tech |