Categories
விளையாட்டு

IPL 2022 கொல்கத்தா-பஞ்சாப் அணிகள்…. ரகானே, உமேஷ் யாதவ் சாதனை…. நேற்றைய போட்டி விபரங்கள்…..!!!!!

IPL கிரிக்கெட்டில் நேற்று நடந்த ஆட்டத்தில் கொல்கத்தா-பஞ்சாப் அணிகள் மோதி கொண்டது. ரசல் அதிரடியில் கொல்கத்தா அணி 14 ஓவரில் வெற்றியடைந்தது. இப்போட்டியில் வீரர்களின் சாதனைகள் மற்றும் சம்பவங்களை குறித்து பார்க்கலாம். நேற்று நடைபெற்ற போட்டியில் ரகானே 12 ரன்னில் தோல்வியடைந்தார். அவர் 8 ரன்கள் எடுத்தபோது IPL கிரிக்கெட் தொடரில் 4000 ரன்கள் எடுத்த இந்தியவீரர்கள் அவர் 7வது இடத்தை பிடித்து உள்ளார். அதிகமான ரன்களை எடுத்த வீரர்கள் பட்டியலில் 2 சதங்களுடன் 12வது இடத்திலுள்ளார். பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் உமேஷ் யாதவ் ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்றார். இதன் வாயிலாக ஒரு அணிக்கு எதிராக அதிகமுறை ஆட்டநாயகன் விருது பெற்றவர் பட்டியலில் உமேஷ் யாதவ் முதலிடத்தில் இருக்கிறார். 2வது இடத்தில் யூசப் பதான், ரோகித் சர்மா, கெயில் போன்ற 3 வீரர்கள் இருக்கின்றனர்.

மேலும் ஒரு அணிக்கு எதிராக அதிகமான விக்கெட் எடுத்த வீரர்களிலும் உமேஷ் யாதவ் முதலிடத்தில் இருக்கிறார். அதன்பின் 2வது இடத்தில் பஞ்சாப் அணிக்கு எதிராக நரேன் 32 விக்கெட்டுகள், 3வது இடத்தில் சென்னை அணிக்கு எதிராக மலிங்கா 31 விக்கெட்டுகள், 4வது இடத்தில் மும்பை அணிக்கு எதிராக பிராவோ 31 விக்கெட்டுகள், 5வது இடத்தில் ராஜஸ்தான் அணிக்கு எதிராக அமித் மிஸ்ரா 30 விக்கெட்டுகளும் வீழ்த்தி உள்ளனர். பஞ்சாப் அணிக்கு எதிராக உமேஷ் யாதவ் 4 ஓவர்களில் 23 ரன்கள் விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

IPL தொடரில் இதுவே இவருடைய சிறந்த பந்து வீச்சு ஆகும். இதன் வாயிலாக உமேஷ் யாதவ் பர்பிள் தொப்பியை கைப்பற்றி உள்ளார். பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 30 பந்துகளில் 71 ரன்கள் குவித்த கொல்கத்தா அணியின் அதிரடி ஆட்டக்காரர் ரசல் ஆரஞ்சுநிற தொப்பியை கைப்பற்றினார். பஞ்சாப் அணிக்கு எதிராக வெற்றி பெற்றதன் வாயிலாக புள்ளிப் பட்டியலில் கொல்கத்தா அணி முதலிடத்தில் இருக்கிறது. பஞ்சாப் அணி பேட்டிங் செய்தபோது 5 விக்கெட்டுகள் சரிந்த நிலையில் ஷாருக்கான் களம் இறங்கினார். அவர் 5 பந்துகள் சந்தித்த சூழலில் சவுத்தி பந்து வீச்சில் ஆட்டம் இழந்தார். அந்த விக்கெட்டை வீழ்த்தியபோது கொல்கத்தா அணி கேப்டன் ஸ்ரேயாஷ் அய்யர் ஷாருக்கான் ஸ்டைலில் கைகளை உயர்த்தினார். இதனை பார்த்த ஷாருக்கானின் மகள் சிரித்தப்படி துள்ளிக்குதித்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |