Categories
விளையாட்டு

IPL 2022: “நாங்கள் முன்னேறிட்டோம்”…. ஐதராபாத் அணி கேப்டன் பேச்சு…..!!!!!

IPL  போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி, கொல்கத்தாவை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றியடைந்தது. மும்பை பிராபோர்ன் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலாவதாக விளையாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 175 ரன் எடுத்து குவித்தது. இதன் காரணமாக ஐதராபாத்துக்கு 176 ரன் இலக்காக இருந்தது. இதனிடையில் நிதிஷ்ரானா 36 பந்தில் 54 ரன்னும் (6 பவுண்டரி, 2 சிக்சர்), ஆந்த்ரே ரஸ்சல் 25 பந்தில் 49 ரன்னும் ( 4 பவுண்டரி, 4 சிக்சர்) எடுத்தனர். தமிழ்நாடு வீரரான டி.நடராஜன் 37 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்வீழ்த்தினார். பின் இம்ரான் மாலிக் 2 விக்கெட்டும், புவனேஸ்வர் குமார், ஜான்சென், சுஜித் தலா 1 விக்கெட்டும் கைப்பற்றினர்.

அதனை தொடர்ந்து விளையாடிய ஐதராபாத் அணியானது  17.5 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியடைந்தது. இதில் ராகுல் திரிபாதி 37 பந்தில் 71 ரன்னும் (4பவுண்டரி, 6சிக்சர்), மார்க் கிராம் 36 பந்தில் 68 ரன்னும் (6 பவுண்டரி , 4 சிக்சர்) எடுத்து குவித்தனர். அதேபோன்று ரஸ்சல் 2 விக்கெட் கைப்பற்றினார். இதனால் ஐதராபாத் அணியானது ஹாட்ரிக் வெற்றியை அடைந்தது. அந்த அணி முதல் 2ஆட்டத்தில் (ராஜஸ்தான், லக்னோ) தோற்றிருந்தது. அதன்பிறகு சென்னை, குஜராத்தை தொடர்ந்து வீழ்த்தியிருந்தது. இந்த வெற்றி தொடர்பாக ஐதராபாத் அணி கேப்டன் வில்லியம்சன் கூறியிருப்பதாவது ‘எங்கள் ஆட்டத்தில் முன்னேற்றத்தை காணமுடிகிறது. தொடக்கத்திலேயே விக்கெட் கைப்பற்றியது முக்கியமான ஒன்றாகும். அதுமட்டுமல்லாமல் மெதுவான பனித்துளியும் உதவியாக இருந்தது.

எங்களின் கடைசிநேர பந்துவீச்சு (டெத் பவுலிங்) சிறப்பாக இருந்தது. இதில் ராகுல் திரிபாதி மிகவும் அற்புதமாக பேட்டிங் செய்தார். இதேபோன்று மர்கிராமும் மாறுபட்ட பங்களிப்பை வெளிப்படுத்தினார். அடுத்ததாக மார்கோ ஜான்செனின் பவுன்ஸ் மற்றும் வேகம் நன்றாக இருந்தது. பந்தை சுவிங் செய்யும் புவனேஸ்வர் குமாருடன் அவர் தாக்குதலில் பெரும் பங்குவகித்தார். உம்ரான் மாலிக் ஒவ்வொருபந்தையும் 150 கி.மீ வேகத்தை தொடும் அளவுக்கு வீசுகிறார். இதன் காரணமாக பந்தை தொட்டவுடன் பவுண்டரிக்கு சென்று விடுகிறது. பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் நாங்கள் மிகுந்த முன்னேற்றமடைந்து வருவதை காணமுடிந்தது என்று வில்லியம்சன் தெரிவித்தார். ஐதராபாத் அணியானது 6-வது ஆட்டத்தில் பஞ்சாப்புடன் நாளை மோதுகிறது. இதற்கிடையில் கொல்கத்தா அணியானது 3-வது தோல்வியை தழுவியது. 6 புள்ளியுடன் உள்ள அந்த அணி 7வது ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்சை வரும் 18-ஆம் தேதி எதிர் கொள்கிறது.

Categories

Tech |