Categories
கிரிக்கெட் விளையாட்டு

IPL 2022 : பந்துவீச்சில் பட்டையை கிளப்பும் கொல்கத்தா…. திணறும் சென்னை…. சோகத்தில் ரசிகர்கள்….!!!

அறுபத்தி ஆறு நாள் கொண்ட ஐபிஎல் கிரிக்கெட் போட்டி இன்று கோலாகலமாக தொடங்கியுள்ளது. எல்லா அணிகளும் தீவிரமாக பயிற்சி எடுத்து வருகின்றனர். நடப்பு ஐபிஎல் 15வது சீசனில் கடந்த ஆண்டு வெற்றியாளரான சென்னை மற்றும் ரன்னரான கொல்கத்தா அணி இன்று மும்பையில் மோதுகின்றது. ஐபிஎல் தொடரில் மிகவும் வெற்றிகரமான அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த ஐபிஎல்-ஐ வெற்றியுடன் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முறை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய கேப்டனாக ரவீந்திர ஜடேஜா பொறுப்பேற்று உள்ளார்.

ஏற்கனவே நான்கு முறை வெற்றி பெற்றுள்ள சிஎஸ்கே அணி 5வது முறை கோப்பையை வெல்ல வேண்டும் என்ற முனைப்பில் உள்ளது . அதேபோல் கொல்கத்தா அணியும் தீவிர பயிற்சியுடன் களமிறங்கியுள்ளன. மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் தொடரின் முதல் லீக் போட்டியில் கொல்கத்தா அணி டாஸ் வென்று முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. இரண்டு அணிகளுக்கும் இடையே நடந்துள்ள 26 போட்டிகளில் சென்னை 17 முறை வெற்றி பெற்றுள்ளது. கொல்கத்தா எட்டு முறை வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டி சமனில் முடிந்துள்ளது.

இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங் செய்து வரும் நிலையில் 8 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 49 ரன்கள் எடுத்துள்ளது. முதலில் களமிறங்கிய ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் கான்வே சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதைத்தொடர்ந்து உத்தப்பா 21 பந்துகளில் 28 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தற்போது ஜடேஜா மட்டும் அம்பத்தி ராயுடு களத்தில் உள்ளனர்.

Categories

Tech |