Categories
விளையாட்டு

IPL (2022) போட்டியில் குஜராத் வெற்றி பெற மோசடி… சுப்பிரமணியன் சுவாமி பரபரப்பு டுவீட்….!!!

IPL 15வது சீசன் கோலாகலமாக நடந்து முடிந்துள்ள சூழ்நிலையில், போட்டியில் மோசடி நடைபெற்று உள்ளதாக சர்ச்சைகள் வெடிக்க ஆரம்பித்து இருக்கிறது. அகமதாபாத் நகரிலுள்ள நரேந்திரமோடி மைதானத்தில் பிரம்மாண்ட IPL இறுதிப் போட்டி நடைபெற்றது. ராஜஸ்தான் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையில் நடைபெற்ற இப்போட்டியை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் அவருடைய மனைவி உள்ளிட்ட பலர் நேரில் கண்டு ரசித்தனர். இந்தபோட்டியில் ராஜஸ்தான் அணியை 7விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய குஜராத் டைட்டன்ஸ் அணியானது சாம்பியன் பட்டத்தை தட்டிசென்றது.

நடப்பு தொடரில் அறிமுக அணியாக களமாடிய இந்தஅணியை கேப்டன் ஹர்திக் பாண்டியா திறம்பட வழிநடத்தி இருக்கிறார். எனினும் இந்த ஐபிஎல் விளையாட்டில் மோசடி நடைபெற்று உள்ளதாகவும், குஜராத் அணிக்குதான் IPL வெற்றி என்பது முன்பே நிர்ணயம் செய்யப்பட்டது போன்றும் உள்ள பேச்சுக்கள் பரவலாக பேசப்பட்டு வந்தது. இந்த நிலையில் இதனை மேலும் உறுதிசெய்யும் வகையில் பா.ஜ.க மூத்த தலைவரான சுப்ரமணியன் சாமி தன் டுவிட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அதில் “டாடா IPLகிரிக்கெட் முடிவுகளானது மோசடி செய்யப்பட்டது என புலனாய்வு அமைப்புகள் சந்தேகிக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார். அத்துடன் பிசிசிஐ-யின் செயலாளராக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் மகன் ஜெய்ஷா பணிபுரிந்து வரும் சூழ்நிலையில், அரசு இந்த விவகாரத்தில் கவனம் செலுத்துமா என்பது சந்தேகம்தான். இதன் காரணமாக இந்த விஷயத்தில் பொதுநல வழக்கு என்பது உண்மையை தெளிவுபடுத்த வாய்ப்பு இருப்பதாகவும்” அவர் குறிப்பிட்டுள்ளார்.

Categories

Tech |