Categories
கிரிக்கெட் விளையாட்டு

IPL 2022 மெகா ஏலம்…. பி.சி.சி.ஐ வகுத்துள்ள முக்கிய விதிமுறைகள்…..!!

ஐ.பி.எல் தொடருக்கான மெகா ஏலம் வருகிற பிப்ரவரி மாதம் 12 மற்றும் 13 ஆம் தேதி பெங்களூருவில் வைத்து நடைபெற உள்ளது. இதனால் அனைத்து அணிகளும் மெகா ஏலத்தில் தங்களது இருப்பு தொகைக்கு ஏற்றவாறு எந்தெந்த வீரர்களை கைப்பற்றலாம் என்பது குறித்து தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. இந்த ஆண்டு ஐ.பி.எல் தொடருக்கான மெகா ஏலத்தில் 590 கிரிக்கெட் வீரர்கள் தங்களது பெயர்களை இணைத்துள்ளனர். இதில் புதிதாக சேர்க்கப்பட்ட லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் அகமதாபாத் உட்பட 10 உரிமையாளர்கள் தங்களது அணிகளை உருவாக்க உள்ளனர்.

இந்நிலையில் ஏலம் சம்பந்தமாக அனைத்து அணிகளும் பின்பற்ற வேண்டிய கட்டாய விதிமுறைகளை பி.சி.சி.ஐ வகுத்துள்ளது. அவை,

  • இந்த ஆண்டு ஐ.பி.எல் தொடருக்கான ஏலம் பயோ பபிளில் நடைபெறும்.
  • பிப்ரவரி 9, 10 மற்றும் 11-ம் தேதிகளில் உரிமையாளர்களுடன் வருபவர்கள் covid-19 நெகட்டிவ் சான்றுகளோடு வரவேண்டும். பி.சி.சி.ஐ அங்கீகாரம் பெற்ற மருத்துவ நிறுவனம் மூலம் சோதனை நடத்தப்படும்.
  • இந்த ஏலத்தில் அணிக்கு ரைட் டூ மேட்ச் விருப்பம் இருக்காது.
  • பழைய 8 ஐ.பி.எல் அணிகளால் 3 வீரர்கள் மட்டுமே தக்கவைக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த ஆண்டு ஐ.பி.எல் தொடரில் புதிதாக இணைய உள்ள 2 அணிகள் ஏலத்திற்கு முன்னதாக 3 வீரர்களை தேர்வு செய்து கொள்ளலாம்.
  • இந்த ஆண்டு ஐ.பி.எல் ஏலத்தொகை 80 கோடியிலிருந்து 90 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. உள்நாட்டு வீரர்களை அணியில் எடுப்பதற்காக இந்த தொகை அதிகப்படுத்தப்பட்டுள்ளது.
  • கடந்த 15 நாட்களில் வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டு இந்தியா திரும்பியவர்கள் 7 நாட்கள் கட்டாயமாக தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும்.
  • பிப்ரவரி 11-ஆம் தேதியன்று வரும் அணி உரிமையாளர்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு covid-19 அறிகுறி இருந்தால் அவர்கள் உடனடியாக தனிமைப்படுத்தப்படுவர்.
  • பிப்ரவரி 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் ஐ.பி.எல் ஏலத்தை சுமூகமாக நடத்துவதற்காக காலை 12 மணி முதல் 7 மணி வரை சோதனை நடத்தப்படும்.
  • மேலும் கோவில் தடுப்பூசி செலுத்திய சான்றிதழ்களின் முழு விவரங்களையும் ஏலத்தில் பங்கேற்பவர்கள் பி.சி.சி.ஐ மருத்துவ குழுவினரிடம் வழங்க வேண்டும்.
  • ஏலம் நடைபெறும் இடத்தில் அனைவரும் கண்டிப்பாக முக கவசம் அணிந்திருக்க வேண்டும்.

Categories

Tech |