Categories
விளையாட்டு

IPL (2022): ராஜஸ்தான் VS பெங்களூர்…. வெற்றியை தட்டி பறிப்பது யார்?…. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…..!!!!!

IPL 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நேற்றுடன் 12 ஆட்டங்கள் முடிந்துவிட்டது. அதன் முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ், குஜராத் டைட்டன்ஸ் 2 வெற்றியுடனும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், பஞ்சாப் கிங்ஸ் 2 வெற்றி , 1 தோல்வியுடனும் தலா 4 புள்ளிகள் பெற்றுள்ளது. இதையடுத்து டெல்லி கேப்பிடல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 1 வெற்றி, 1 தோல்வியுடன் தலா 2 புள்ளி பெற்றுள்ளது. அத்துடன் சென்னை சூப்பர் கிங்ஸ் 3 தோல்வியுடனும் , மும்பை இந்தியன்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் தலா 2 தோல்வியுடனும் புள்ளிகள் எதுவும் பெறவில்லை. IPL தொடரின் 11வது நாளான இன்று 13வது லீக் ஆட்டம் நடைபெறும்.

மும்பை வான்கடே மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இப்போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ்- டு பிளிஸ்சிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோத இருக்கிறது. ராஜஸ்தான் அணி பெங்களூருவை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றிபெறும் ஆர்வத்தில் இருக்கிறது. அந்த அணி முதல் ஆட்டத்தில் ஐதராபாத்தை 61 ரன் வித்தியாசத்திலும், 2வது ஆட்டத்தில் மும்பையை 23 ரன் வித்தியாசத்திலும் வெற்றியடைந்தது. அந்த அணியில் கேப்டன் சாம்சன், ஜோஸ் பட்லர், ஹெட்மையர், படிக்கல் ஆகிய சிறந்த பேட்ஸ்மேன்களும் பவுல்ட், பிரசித் கிருஷ்ணா, யசுவேந்திர சாஹல் போன்ற சிறந்த பவுலர்களும் இருக்கின்றனர்.

பெங்களூர் அணி தொடக்கஆட்டத்தில் பஞ்சாபிடம் 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. அதன்பின் கொல்கத்தாவை 3விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. ராஜஸ்தானை தோற்கடித்து 2வது வெற்றியை பெறும் வேட்கையில் அந்த அணி இருக்கிறது. இதற்கிடையில் பெங்களூர் அணியில் கேப்டன் டு பிளிஸ்சிஸ், விராட் கோலி, ஹசரங்கா, தினேஷ் கார்த்திக், ஹர்‌ஷல் பட்டேல் ஆகிய சிறந்த வீரர்கள் இருக்கின்றனர். இருஅணிகளும் இன்று மோதுவது 25வது போட்டியாகும். இதுவரையிலும் நடந்த 24 ஆட்டத்தில் பெங்களூரு 12-ல், ராஜஸ்தான் 10-ல் வெற்றி பெற்றுள்ளது.

Categories

Tech |