இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்படாது என்று பிசிசிஐ நிர்வாகி ஒருவர் கூறியுள்ளார். கொரோனா காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும், போட்டிகள் அனைத்தும் வான்கடே மைதானம், டி. ஒய் பாட்டில் மைதானம் மற்றும் புனே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் திட்டமிட்டபடி பிப்ரவரி 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் ஏலம் நடைபெறும் எனவும் கூறப்படுகிறது. ஐபிஎல் போட்டிகளில் ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்படாது என்று வெளியாகியுள்ள இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Categories