Categories
விளையாட்டு

IPL (2022): “ஹாட்ரிக்” வெற்றி பெறும் ஆர்வத்தில் ஐதராபாத் அணி…. நடக்க போவது என்ன….?….!!!!!!

IPL போட்டியில் 25வது லீக் ஆட்டம் மும்பை பிராபோர்ன் மைதானத்தில் இன்று இரவு 7:30 மணிக்கு நடைபெற இருக்கிறது. அப்போது வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத், ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகள் மோதுகிறது. இதில் ஐதராபாத் அணி தொடக்க ஆட்டத்தில் ராஜஸ்தானிடம் 61 ரன் வித்தியாசத்திலும், 2-வது போட்டியில் லக்னோவிடம் 12 ரன் வித்தியாசத்திலும் தோல்வியை தழுவியது. இதையடுத்து சென்னை அணியை 8 விக்கெட் வித்தியாசத்திலும், குஜராத் அணியை 8 விக்கெட் வித்தியாசத்திலும் வீழ்த்தியிருந்தது. அத்துடன் 2 வெற்றி, 2 தோல்வியுடன் 4 புள்ளிகள் பெற்று இருக்கிறது. இதனால் ஐதராபாத் அணி கொல்கத்தாவை வீழ்த்தி “ஹாட்ரிக்” வெற்றி பெறும் ஆர்வத்தில் இருக்கிறது.

இதில் ஐதராபாத் அணியில் கேப்டன் வில்லியம்சன், அபிஷேக் வர்மா, நிகோலஸ் பூரன், மார்க்கிராம், புவனேஷ்வர்குமார், நடராஜன் ஆகிய சிறந்த வீரர்கள் இருக்கின்றனர். கொல்கத்தா அணியானது 3 வெற்றி, 2 தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்று 2வது இடத்தில் உள்ளது. அந்த அணி சென்னை (6 விக்கெட்), பஞ்சாப் (6 விக்கெட்), மும்பை (5 விக்கெட்) போன்றவற்றை வீழ்த்தியிருந்தது. பெங்களூர் (3 விக்கெட்), டெல்லி (44ரன்) அணிகளிடம் தோற்றிருந்தது. ஆகவே ஐதராபாத்தை வீழ்த்தி கொல்கத்தா 4வது வெற்றியை பெறுமா..? என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோன்று கொல்கத்தா அணியில் கேப்டன் ஸ்ரேயர்ஸ் அய்யர், வெங்கடேஷ் அய்யர், ரஸ்சல், கம்மின்ஸ் ஆகிய சிறந்த வீரர்கள் இருக்கின்றனர். இருஅணிகளும் இதுவரையிலும் 21 முறை மோதியுள்ளது.

Categories

Tech |