ஐபிஎல் 2022 சீசனில் புதிதாக சேர்க்கப்படுள்ள அகமதாபாத் அணியின் அதிகாரப்பூர்வ பெயர் வெளியாகியுள்ளது.
15-வது சீசன் கிரிக்கெட் தொடர் வருகின்ற மார்ச் மாதம் தொடங்குகிறது.இந்நிலையில் இந்த ஆண்டு புதிதாக லக்னோ ,அகமதாபாத் ஆகிய 2 அணிகள் சேர்க்கப்பட்டுள்ளன. அதன்படி புதிதாக சேர்க்கப்பட்டுள்ள அணியின் பெயர்கள் வெளியாகி உள்ளது. இதில் லக்னோ அணிக்கு “லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்” என்று பெயரிடப்பட்டுள்ளது.
அதேபோல் புதிய அணியான அகமதாபாத் அணிக்கு “குஜராத் டைட்டன்ஸ்” என பெயரிடப்பட்டுள்ளது .மேலும் அந்த அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டுள்ளார் .இதனிடையே நடப்பு ஐபிஎல் சீசனுக்கான மெகா ஏலம் வருகின்ற 12 ,13-ம் தேதி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.