Categories
கிரிக்கெட் விளையாட்டு

IPL 2022 : ஐபிஎல் தொடர் ஒளிபரப்பு உரிமம் …. ரூ.50 ஆயிரம் கோடி வருவாய் ஈட்டும் பிசிசிஐ ….! விவரம் இதோ ….!!!

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி கோடிக்கணக்கில் வருமானத்தை பெற்று தரும் தொடராக உள்ளது.இதனால் ஐபிஎல் தொடருக்கான ஒளிபரப்பு உரிமத்தை பெறுவதில் எப்போதுமே கடும் போட்டி நிலவும்.இந்நிலையில் தற்போது ஐபிஎல் தொடரை ஸ்டார் இந்தியா நிறுவனம் ஒளிபரப்பி வருகின்றது. மேலும் அந்த நிறுவனம் 2018 முதல் 2022 வரை ரூபாய் 16 ஆயிரத்து 347.5 கோடிக்கு ஒளிபரப்பு உரிமையை பெற்றிருந்தது.இதற்கு  முன் 2008 – 2017 வரை சோனி நெட்வொர்க் நிறுவனம் ரூபாய் 8 ஆயிரத்து 200 கோடிக்கு ப ஒளிபரப்பு உரிமத்தை பெற்றிருந்தது.
இந்நிலையில் ஐபிஎல் ஒளிபரப்பு உரிமம் இந்த ஆண்டுடன் முடிவடைந்த நிலையில்  அடுத்த 5 ஆண்டுக்கான ஒளிபரப்பு உரிமம் வழங்கும் நடைமுறையை பிசிசிஐ தொடங்கும் பணியில் ஈடுபட்டு உள்ளது.அதேபோல் ஆன்லைன் மூலம் ஒளிபரப்பும் உரிமையை வழங்கும் ஏலம் நடைமுறையை இந்த வாரத்தில் தொடங்கும் என்றும் ஏப்ரல் முதல் மே மாதத்தில் ஏலம் பணி முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் நடப்பு ஐபிஎல் சீசனில் 10 அணிகள் விளையாடுவதாலும், ஐபிஎல் போட் டிக்கான மதிப்பு உயர்வதாலும், ஒளிபரப்பு உரிமத்துக்கு அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
அதேசமயம் 2023 முதல் 2027 வரையிலான 5 ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் ஒளிபரப்பு உரிமம் சுமார் ரூபாய் 50 ஆயிரம் கோடி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.கடந்த ஆண்டு பிசிசிஐ  தலைவர் கங்குலி ஒளிபரப்பு உரிமத்தின் மதிப்பு ரூபாய் 40 ஆயிரம் கோடியை தாண்டும் என எதிர்பார்ப்பதாக தெரிவித்திருந்தார். தற்போது நிபுணர்களின் கூற்றுப்படி ரூபாய் 50 ஆயிரம் கோடி வருமானம் கிடைக்கும் என கிரிக்கெட் வாரியம் எதிர்பார்க்கிறது.மேலும் ஸ்டார் , டிஸ்னி இந்தியா நிறுவனம், சோனி பிச்சர்ஸ் நெட்வெர்க், ரிலையன்ஸ் நிறுவனத்தின் அமைப்பான வியாகாம், அமேசான் உள்ளிட்ட நிறுவனங்கள் ஐபிஎல் ஒளிபரப்பு உரிமையை பெற கடுமையாக போட்டியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |