Categories
கிரிக்கெட் விளையாட்டு

IPL 2022 :காயத்தால் அவதிப்படும் தீபக் சாஹர் …. கவலையில் CSK அணி ….! தொடரில் பங்கேற்பாரா ….?

15-வது சீசன் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வருகின்ற மார்ச் 26-ம் தேதி தொடங்குகிறது.இதில் நடந்த ஐபிஎல் மெகா ஏலத்தில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹரை சிஎஸ்கே அணி ரூபாய் 14 கோடிக்கு எடுத்துள்ளது. இந்நிலையில் ஐபிஎல் போட்டி தொடங்கவுள்ள நிலையில், தீபக் சாஹர் காயத்தில் சிக்கியிருப்பது சிஎஸ்கே அணிக்கு கவலை அடையச் செய்துள்ளது.

கடந்த மாதம் 20-ம் தேதி கொல்கத்தாவில் நடைபெற்ற வெஸ்ட்இண்டீஸ் அணிகெதிரான கடைசி டி20 போட்டியின் போது தீபக் சாஹருக்கு வலது கால் தொடையில் தசைப்பிடிப்பு ஏற்பட்டது. அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் தசைநார் கிழிந்து இருப்பது தெரியவந்தது.

மேலும் இந்த காயம் குணமடைய குறைந்தது 8 வார காலம் ஆகும் என்றும், இதனால் ஐபிஎல் தொடரில் பாதிக்கு மேற்பட்ட ஆட்டங்களை அவர் தவற விடுவார் என்றும் பிசிசிஐ நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. தற்போது தீபக் சாஹர் பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் காயத்திலிருந்து மீள்வதற்கான பயிற்சி முறைகளை மேற்கொண்டு வருகின்றார்.

 

Categories

Tech |