Categories
கிரிக்கெட் விளையாட்டு

IPL 2022 : லக்னோ அணியின் பெயர் என்ன ….? வெளியான அதிகாரப்பூர்வ அப்டேட் ….!!!

15-வது சீசன் ஐபிஎல் தொடரில் புதிய அணியான லக்னோ அணியின் பெயர் உட்பட முக்கிய அப்டேட்களை அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது .

2020 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் மெகா ஏலத்துக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இவர் புதிதாக லக்னோ , அகமதாபாத் ஆகிய 2 அணிகள் இடம் பெற்று மொத்தம் 10 அணிகள் விளையாட உள்ளது. இதில் லக்னோ அணி தனது இறுதி கட்ட பணியை முடிக்க ஆயத்தமாக உள்ளது. இதனால் அந்த அணியின் பெயர் என்னவாக இருக்கும் என ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் சர்ப்ரைஸ்  கொடுக்கும் விதமாக தங்களின் பெயர் என்ன என்ற தகவலை லக்னோ அணி நிர்வாகம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

அதில் லக்னோ என்ற வார்த்தையை மட்டும் காண்பித்துவிட்டு , அதற்கடுத்த என்ன வார்த்தை என்பதை மறைத்துள்ளனர். இதனால் அந்த அணியின் பெயர் என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதனால் விரைவில் அந்த அணியின் பெயர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது .மேலும் லக்னோ அணியின் கேப்டனாக கே.எல்.ராகுலை ஒப்பந்தம் செய்துள்ளது. இதையடுத்து அந்த அணியில் இஷான் கிஷன் ககிஸ்கோ ரபாடா ஆகியோர் ஒப்பந்தம் செய்ய இருப்பதாக தெரிகின்றது.

Categories

Tech |