அடுத்த ஆண்டு நடைபெறும் 15-வது ஐபிஎல் சீசன் ஐபிஎல் தொடரில் புதிதாக இடம்பெறும் லக்னோ அணிக்கு கேப்டனாக கே.எல்.ராகுல் நியமிக்கபட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
14 வது சீசன் ஐபிஎல் தொடர் சமீபத்தில் வெற்றிகரமாக நடந்து முடிந்தது .இதில் சிஎஸ்கே அணி 4-வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது .இதனிடையே அடுத்த ஆண்டு நடைபெறும் 15-வது ஐபிஎல் சீசனில் புதியதாக லக்னோ ,அகமதாபாத் ஆகிய இரண்டு அணிகள் இடம்பெற்றுள்ளன. இதில் அடுத்த சீசனுக்கான ஐபிஎல் மெகா ஏலம் விரைவில் நடைபெற உள்ளது. இதில் அனைத்து அணிகளும் தங்கள் அணியில் தலா 4 வீரர்களை மட்டும் தக்க வைத்துக் கொண்டு மற்ற வீரர்களை விடுவிக்க வேண்டும். இதனால் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியிலிருந்து விலகிய டேவிட் வார்னர் உட்பட பல முன்னணி வீரர்கள் இந்த மெகா ஏலத்தில் இடம் பெற உள்ளதால் இது குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
அதேசமயம் வீரர்கள் எந்த அணியில் இடம் பெறுகின்றன என்பது குறித்த தகவல் வெளியாகி வருகின்றது. அதன்படி பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனான கே எல் ராகுல் அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் புதிய அணியான லக்னோ அணிக்கு கேப்டனாக நியமிக்கபட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது .அதன்படி லக்னோ அணியின் உரிமையாளர்கள் ராகுலை தொடர்பு கொண்டு ஐபிஎல் ஏலம் குறித்து பேசி முடித்து உள்ளதாகவும் ,இதற்கு கே.எல்.ராகுல் பஞ்சாப் அணியிலிருந்து விலகி லக்னோ அணிக்கு ஒப்புக்கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனிடையே சமீபத்தில் நடந்த ஐபிஎல் தொடரில் மிக சிறப்பாக விளையாடிய கே.எல்.ராகுல் அதிக ரன்கள் குவித்த சிஎஸ்கே அணி வீரர் ருதுராஜ் கெய்க்வாட்டை விட 9 ரன் குறைவாக அடித்திருந்தார். இதற்கு முன்னதாக கடந்த ஐபிஎல் 13-வது சீசனில் 670 ரன்கள் எடுத்த கே.எல்.ராகுல் ஆரஞ்ச் கேப்பை கைப்பற்றி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது .