15-வது சீசனுக்கான ஐபிஎல் மெகா ஏலம் கடந்த 2 நாட்களாக பெங்களூரில் விறுவிறுப்பாக நடைபெற்றது .இதில் புதிய அணிகளான லக்னோ ,அகமதாபாத் உட்பட மொத்தம் 10 அணிகள் ஏலத்தில் பங்கேற்றனர் .மொத்தம் 600 வீரர்கள் இடம்பெற்ற இந்த ஏலத்தில் 204 வீரர்கள் ரூ 551,70,00,000 கோடிக்கு வாங்கப்பட்டுள்ளனர்.இதில் சுமார் 108 வீரர்கள் ரூ 1 கோடிக்கு மேல் ஏலத்தில் விலை போயுள்ளனர்.
அதே சமயம் நடந்த ஐபிஎல் மெகா ஏலத்தில் அதிக தொகைக்கு வாங்கப்பட்ட வீரர்களின் பட்டியலில் இஷான் கிஷன் ரூ 15.5 கோடியுடன் முதலிடத்திலும்,அடுத்ததாக தீபக் சாகர் ரூ 14 கோடியுடன் 2-வது இடத்திலும் இடம்பிடித்துள்ளனர்.இதில் இஷான் கிஷனை மும்பை இந்தியன்ஸ் அணியும், தீபக் சாகரை சிஎஸ்கே அணியும் ஏலத்தில் எடுத்துள்ளது.