ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த கேஎல் ராகுல் நடப்பு சீசன் ஐபிஎல் தொடரில் புதிய வரவாக வந்துள்ள லக்னோ அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.மேலும் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு கேப்டனாக மயங்க் அகர்வால் நியமிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது.
இந்நிலையில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் புதிய கேப்டனாக மயங்க் அகர்வால் நியமிக்கப்படுவதாக, பஞ்சாப் அணி நிர்வாகம் இன்று அறிவித்துள்ளது.கடந்த 2011-ம் ஆண்டு ஐபிஎல்-லில் அறிமுகமான மயங்க் அகர்வால் இதுவரை 100 போட்டிகளில் விளையாடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
👀 ➩🏆#SherSquad, the 🆕 #CaptainPunjab means business! 🤩#SaddaPunjab #PunjabKings #TATAIPL2022 pic.twitter.com/RAlOxJaznT
— Punjab Kings (@PunjabKingsIPL) February 28, 2022