நடப்பு ஐபிஎல் சீசனில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாக மயங்க் அகர்வால் நியமிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு கடந்த சீசன்களில் கே.ல்.ராகுல் கேப்டனாக செயல்பட்டார். ஆனால் நடப்பு ஐபிஎல் சீசனில் புதிய வரவாக வந்துள்ள லக்னோ அணிக்கு கேப்டனாக கே.ல்.ராகுல் நியமிக்கப்பட்டுள்ளார்.இந்நிலையில் பஞ்சாப் அணிக்கு கேப்டனாக யாரை நியமிப்பது என்பது தொடர்பாக அணி நிர்வாகம் ஆலோசித்து வந்தது.இதில் அந்த அணியின் தொடக்க வீரரான மயங்க் அகர்வால் கேப்டனாக நியமிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதேசமயம் பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டனாக மயங்க் அகர்வால் இந்த வார இறுதியில் அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.இதையடுத்து நடப்பு ஐபிஎல் சீசனில் பஞ்சாப் கிங்ஸ் அணியில் ஷிகர் தவான், ஜானி பேர்ஸ்டோவ், ரபடா உள்ளிட்ட வீரர்கள் உள்ளனர். அதேசமயம் ஷிகர் தவான் பஞ்சாப் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியது. ஆனால் மயங்க் அகர்வால் பஞ்சாப் அணிக்காக கடந்த சீசன்களில் சிறப்பான ஆட்டங்களை வெளிப்படுத்தி உள்ளதால் அவருக்கு கேப்டன் பொறுப்பு வழங்கப்பட உள்ளது.