2022 ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் புதிய பயிற்சியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
15-வது சீசன் ஐபிஎல் தொடர் அடுத்த ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் தொடங்க உள்ளது. இந்நிலையில் அடுத்த ஆண்டுக்கான ஐபிஎல் மெகா ஏலம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெறுகிறது .இந்நிலையில் நடப்பு ஐபிஎல் சீசனில் புள்ளி பட்டியல் கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டஹைதராபாத் அணி புதிய பயிற்சியாளர்களை அறிவித்துள்ளது .இதில் பேட்டிங் பயிற்சியாளராக பிரையன் லாராவும், வேகப்பந்துவீச்சு பயிற்சியாளராக டேல் ஸ்டெய்னும் அணியில் நியமிக்கப்பட்டுள்ளனர் .
அதேசமயம் சுழற்பந்துவீசாரளாக பயிற்சியாளராக முத்தையா முரளிதரன் நியமிக்கப்பட்டுள்ளார் . இதையடுத்து இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹேமங் பதானி ஃபீல்டிங் பயிற்சியாளராகவும், ஆஸ்திரேலிய அணியின் டாம் மூடி தலைமை பயிற்சியாளராகவும் தனது பணியை தொடர்வார்கள் என சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.