Categories
கிரிக்கெட் விளையாட்டு

IPL 2022 :அகமதாபாத் மீதான சூதாட்ட சர்ச்சை….! விசாரிக்க கமிட்டி அமைக்கப்படும் – ஜெய்ஷா…..!!!

அடுத்த சீசன் ஐபிஎல்-லின் புதிய அணியான அகமதாபாத்  அணி மீது எழுந்த  சர்ச்சை குறித்து  விசாரணை நடத்தப்படும் என பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா தெரிவித்துள்ளார்.

15-வது சீசன் ஐபிஎல் தொடரில் புதிதாக லக்னோ , அகமதாபாத் ஆகிய 2 அணிகள் இடம்பெற்றுள்ளன.இதில் அகமதாபாத் அணியை ரூபாய் 5,625 கோடிக்கு சி.வி.சி.கேப்பிட்டல் நிறுவனம் வாங்கியுள்ளது. இதனிடையே அந்நிறுவனம் வெளிநாடுகளில் உள்ள சூதாட்ட நிறுவனங்களுடன் தொடர்பு வைத்திருப்பதாக சர்ச்சை எழுந்தது.

இதனிடையே பிசிசிஐ-யின் 90-வது செயற்குழு பொதுக்கூட்டம் கொல்கத்தாவில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பிறகு பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா கூறும்போது,”அகமதாபாத் அணியை வாங்கிய சி.வி.சி.கேப்பிட்டல் நிறுவனத்தின் மீது எழுந்துள்ள சர்ச்சை குறித்து நடுநிலையான கமிட்டி அமைத்து விசாரணை நடத்தப்படும் “என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |