15-வது சீசன் ஐபிஎல் தொடர் வருகின்ற மார்ச் 26-ம் தேதி முதல் தொடங்கி மே 29-ம் தேதி வரை நடைபெற உள்ளதாக என பிசிசிஐ அறிவித்துள்ளது.இதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.இதில் நடப்பு சீசன் மெகா ஏலத்தில் புதிய அணியான குஜராத் டைட்டன்ஸ் இங்கிலாந்து வீரர் ஜேசன் ராய்-யை ரூபாய் 2 கோடிக்கு வாங்கியது .
இந்நிலையில் ஐபிஎல் தொடரிலிருந்து ஜேசன் ராய் விலகுவதாக தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் ,” ஐபிஎல் போட்டி நடைபெறும் 2 மாதங்களும் முழு’பயோ-பபுள்’ பாதுகாப்பில் இருக்க வேண்டும். இதனால் மனநிலையை கருத்தில் கொண்டு தொடரில் இருந்து வெளியேறுவதாக ஜேசன் ராய் விளக்கம் அளித்துள்ளார்.
எனவே அவரின் விலகலால் குஜராத் டைட்டன்ஸ் அணி மற்றும் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யாவிற்கு மிகப்பெரிய சிக்கல் உருவாகியுள்ளது. குறிப்பாக குஜராத் அணியின் ஓப்பனிங்கில் சுப்மன் கில் மட்டுமே தற்போது அணியில் முதன்மை தேர்வாக உள்ளார். அதேசமயம் மற்ற வீரர்கள் அனைவரும் மிடில் ஆர்டர் மற்றும் லோயர் ஆர்டரில் களமிறங்கி கூடியவர்கள். இதனால் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.