2022-ம் ஆண்டு ஐபிஎல் சீசனில் சிஎஸ்கே அணியில் தோனி ,ஜடேஜா, ருதுராஜ் மற்றும் மொயீன் அலி ஆகியோர் தக்க வைக்கப்பட்டுள்ளனர்.
15-வது ஐபிஎல் சீசனுக்கான மெகா ஏலம் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற உள்ளது .இதில் ஐபிஎல் அணிகள் அதிகபட்சமாக 4 வீரர்களை தக்க வைத்துக் கொண்டு மற்ற வீரர்களை ஏலத்தில் விடுவிக்க வேண்டும். அதன்படி ஒவ்வொரு அணியும் அதிகபட்சமாக வீரர்களை ஏலத்தில் எடுக்க ரூ 90 கோடி வரை செலவு செய்யலாம் .அதன்படி 2022 ஐபிஎல் சீசனில் சிஎஸ்கே அணியில் 4 வீரர்களை தக்க வைத்துகொண்டுள்ளது.
இதில் தோனி ரூபாய் 12 கோடிக்கும் ,ஆல் ரவுண்டர் ஜடேஜா ரூபாய் 16 கோடிக்கு ,மொயீன் அலி ரூபாய் 8 கோடிக்கும் , ருதுராஜ் ரூபாய் 6 கோடிக்கும் அணியில் தக்க வைக்கப்பட்டுள்ளனர். அதோடு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தோனி தக்க வைக்கப்பட்டுள்ளதால் அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரிலும் தோனி விளையாடுவது உறுதியாகியுள்ளது .இதனால் சிஎஸ்கே ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்