Categories
கிரிக்கெட் விளையாட்டு

IPL 2022 : ஐபிஎல் போட்டியை நேரில் காண …. ரசிகர்களுக்கு அனுமதி ….!!!

15-வது சீசன் ஐபிஎல் தொடர் வருகின்ற 26-ம் தேதி முதல் தொடங்குகிறது.

15-வது சீசன் ஐபிஎல் தொடர் வருகின்ற 26-ம் தேதி முதல் மும்பையில் தொடங்குகிறது. மொத்தம்    10 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் பயிற்சியில் ஈடுபடுவதற்கான ஏற்பாடுகளை பிசிசிஐ செய்து வருகிறது. மேலும் ஐபிஎல் அணிகள் பயிற்சி மேற்கொள்வதற்காக மும்பை மற்றும் புறநகர் பகுதியில் 5 மைதானங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே ஐபிஎல் அணிகள் வருகிற 14 அல்லது 15-ம் தேதியிலிருந்து பயிற்சியை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ஐபிஎல் போட்டியை நேரில் காண கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட 25 %  பார்வையாளர்களுக்கு மட்டும் அனுமதிக்க மராட்டிய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

 

Categories

Tech |