15-வது சீசன் ஐபிஎல் தொடரில் லக்னோ அணியின் பயிற்சியாளராக ஜிம்பாப்வே அணியின் முன்னாள் வீரர் ஆண்டி ஃபிளவர் நியமிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
15-வது சீசன் ஐபிஎல் தொடரில் புதியதாக லக்னோ ,அகமதாபாத் ஆகிய 2 அணிகள் சேர்க்கப்பட்டு மொத்தம் 10 அணிகள் விளையாட உள்ளது .இந்நிலையில் ஐபிஎல் ஏலத்துக்கு முன்பாக ஏற்கனவே இருந்த ஐபிஎல் அணிகள் தங்கள் அணியில் 4 வீரர்களை தக்க வைத்துக்கொள்ளலாம் என பிசிசிஐ தெரிவித்திருந்தது .அதன்படி ஐபிஎல் அணிகள் தங்கள் அணியில் தக்க வைக்கப்பட்ட வீரர்களை அறிவித்தது .மேலும் புதிய அணிகளான லக்னோ , அகமதாபாத் ஆகிய 2 அணிகளும் ஏலத்துக்கு முன்பாக 3 வீரர்களை தக்க வைக்கலாம் என பிசிசிஐ தெரிவித்தது .இதில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் கே.எல்.ராகுலை பஞ்சாப் அணி தக்கவைக்கவில்லை.
அதே சமயம் அவர் ஏலத்தில் பங்கேற்க விருப்பம் தெரிவித்ததால் அவரை அணியில் தக்க வைக்க வில்லை என அனில் கும்ளே பயிற்சியாளர்களை கூறியிருந்தார். இந்நிலையில் கே.எல்.ராகுல் லக்னோ அணிக்கு கேப்டனாக செயல்பட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது இதனிடையே ஜிம்பாப்வே அணியின் முன்னாள் வீரரான லெஜண்ட் ஆண்டி ஃபிளவர் லக்னோ அணியின் பயிற்சியாளராக செயல்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது இவர் தற்போது பஞ்சாப் கிங்ஸ் அணியின் துணை பயிற்சியாளராக உள்ளார் .மேலும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை லக்னோ அடுத்தவாரம் அறிவிக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.