15-வது சீசன் ஐபிஎல் தொடரில் புதிதாக லக்னோ , அகமதாபாத் ஆகிய 2 அணிகள் இணைக்கப்பட்டு மொத்தம் 10 அணிகள் விளையாட உள்ளது .இந்நிலையில் அடுத்த ஆண்டு நடைபெறும் ஐபிஎல் சீசனுக்கான மெகா ஏலம் விரைவில் நடைபெற உள்ளது. இதில் ஏற்கனவே இருந்த ஐபிஎல் அணிகள் தங்கள் அணியில் 4 வீரர்களை தக்க வைத்துக்கொள்ளலாம் என பிசிசிஐ தெரிவித்திருந்தது .அதன்படி ஐபிஎல் அணிகள் தங்கள் அணியில் தக்க வைக்கப்படும் வீரர்களை அறிவித்தது. இதனிடையே புதிய அணிகளான லக்னோ ,அகமதாபாத் ஆகிய 2 அணிகளும் 3 வீரர்களை ஏலத்துக்கு முன்பாக தக்க வைக்கலாம் என பிசிசிஐ தெரிவித்துள்ளது .
அதன்படி இம்மாதம் 30-ஆம் தேதிக்குள் வீரர்களை தேர்வு செய்ய வேண்டும் என பிசிசிஐ அறிவித்துள்ளது . இந்த நிலையில் புதிய அணியான லக்னோ அணியில் தக்க வைக்கப்படும் மூன்று வீரர்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது .இதில் மும்பை இந்தியன்ஸ் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான இஷான் கிஷன் மும்பை அணிக்காக சிறந்த பங்களிப்பை வழங்கினார். ஆனால் அவரை மும்பை இந்தியன்ஸ் அணி தக்க வைக்கவில்லை .அதேசமயம் இஷான் கிஷனுக்கு பதிலாக சூர்யகுமார் யாதவ் அணியில் தங்க வைக்கப்பட்டார் .இந்நிலையில் இஷான் கிஷனை லக்னோ அணி தக்க வைக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதேபோல் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் இடம் பெற்றிருந்த ரஷித் கானை லக்னோ அணி பெரிய தொகைக்கு தக்கவைக்க முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாக கே.எல்.ராகுலை அந்த அணியில் தக்க வைக்கவில்லை. மேலும் அவர் ஏலத்தில் பங்கேற்க விருப்பம் தெரிவித்ததால் பஞ்சாப் அணியில் தக்க வைக்கவில்லை. இதனால் கே.எல்.ராகுலை லக்னோ அணி தக்க வைக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது .