Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

IPL 2023 Auction : அடேங்கப்பா..! இவ்வளவு கோடியா.! அள்ளிய டாப் 5 வீரர்கள்…!!

ஐபிஎல் மினி ஏலத்தில் அதிக தொகைக்கு ஏலம் போன டாப் 5 வீரர்கள் யார் என்பது பற்றி பார்ப்போம்..

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 16வது சீசன் அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறுகிறது. இதனிடையே இந்த தொடரில் பங்கேற்றுள்ள 10 அணிகளும் மொத்தம் 163 வீரர்களை தக்க வைத்துள்ளது. இந்நிலையில் கழட்டி விடப்பட்டுள்ள வீரர்களின் இடத்தை நிரப்புவதற்கான மினி ஏலம் கேரள மாநிலம் கொச்சியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் இன்று 2:30 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் கோடிக்கணக்கில் முக்கிய வீரர்கள் ஏலம் போயுள்ளனர். இதில் சாம் கரன், கேமரூன் கிரீன், பென் ஸ்டோக்ஸ்,  நிக்கோலஸ் பூரான், ஹாரி புரூக் ஆகிய 5 வீரர்கள் அதிக தொகை ஏலம் போய் உள்ளனர்

அதிக விலை கொடுத்து வாங்கப்பட்ட வீரர்கள் – அணிகள்  :

இங்கிலாந்து ஆல்ரவுண்டர் சாம் கரன் –  பஞ்சாப் கிங்ஸ் (ரூ 18.50 கோடி)

ஆஸ்திரேலியா ஆல்ரவுண்டர் கேமரூன் கிரீன் – மும்பை இந்தியன்ஸ் (ரூ 17.5 கோடி)

இங்கிலாந்து ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் –  சென்னை சூப்பர் கிங்ஸ் (ரூ 16.25 கோடி)

வெஸ்ட் இண்டீஸ் வீரர் நிக்கோலஸ் பூரான் – லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (ரூ 16 கோடி)

இங்கிலாந்து வீரர் ஹாரி புரூக் –  சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (ரூ 13.25 கோடி)

இதில் குறிப்பிட வேண்டிய விஷயம் என்னவென்றால் இதில் 3 பேர் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஆல்ரவுண்டர்கள். மேலும் இதில் யாரும் எதிர்பார்க்காத நிக்கோலஸ் பூரான் 16 கோடிக்கு ஏலம் போய் உள்ளார். அவர் கடந்த சில காலமாக பார்ம் இல்லாமல் சரியாக ஆடாத நிலையில், திடீரென ஐபிஎல் தொடரில் அதிக தொகைக்கு ஏலம் போனது கிரிக்கெட் ரசிகர்களை திரும்பி பார்க்க வைத்துள்ளது. மற்றபடி 4 பேரும் அதிகதொகைக்கு ஏலம் போவார்கள் என்பது ஏலத்திற்கு முன்பாகவே கணிக்கப்பட்டது.

 

 

Categories

Tech |