Categories
அரசியல்

IPL 2023: ரூ. 2 கோடி, ரூ. 1 கோடி ஏலத்தில் அடிப்படை விலை வீரர்கள் பட்டியல்…. முழு லிஸ்ட் இதோ….!!!!

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் 15 சீசன்கள் வெற்றிகரமாக முடிவடைந்த நிலையில், 16-வது சீசன் அடுத்த வருடம் நடைபெற இருக்கிறது. இந்த போட்டியை முன்னிட்டு கடந்த வருடம் ஐபிஎல் மெகா ஏலம் நடைபெற்றதால், இந்த வருடம் வருகிற 23-ஆம் தேதி கொச்சியில் வைத்து மினி ஏலம் நடைபெற இருக்கிறது. இந்த ஏலத்தில் 714 இந்திய வீரர்கள் மற்றும் 277 வெளிநாட்டு வீரர்கள் என மொத்தம் 991 வீரர்கள் விண்ணப்பித்தனர். இதில் 405 வீரர்கள் இறுதி செய்யப்பட்டு 405 வீரர்களும் ஏலத்தில் விடப்பட்டுள்ளனர். இருப்பினும் அதிகபட்சமாக 87 வீரர்கள் மட்டுமே தேர்வு செய்யப்படுவார்கள். இதில் 30 வெளிநாட்டு வீரர்களும் இடம் பெற வாய்ப்பு இருக்கிறது.

இந்நிலையில் வழக்கம்போல் ஐபிஎல் மினி ஏலத்தில் அதிகபட்ச விலையாக 2 கோடி ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளதோடு, அதற்கு அடுத்தபடியாக 1 1/2 கோடி, 1 கோடி மற்றும் 75 லட்சம் 50 லட்சம் என அடிப்படை விலையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் எந்த வீரர்கள் அதிகபட்ச விலைக்கு தங்கள் பெயரை ஏலத்தில் பதிவு செய்து இருக்கிறார்கள் என்பது குறித்து தற்போது பார்க்கலாம். அதன்படி வில்லியம்சன், நிக்கோலஸ் பூரான் பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஷாம் கரன் போன்ற 21 வீரர்கள் தங்களுடைய பெயரை 2 கோடி ரூபாய் பட்டியலில் பதிவு செய்துள்ளனர்.

அதன் பிறகு ஆஸ்திரேலியா வீரர் செம்‌ ஆபாட், ரெய்லி மெர்ரில், ரிச்சர்ட்சன், ஆடம் சாம்பா, டேவிட் மாலன், ஜேசன் ராய், ருத்தர் போர்டு, ஷகிபுல் ஹசன் போன்ற வீரர்கள் தங்களுடைய பெயரை ஏலத்தில் 1 1/2 கோடி ரூபாய் அடிப்படை பிரிவில் பதிவு செய்துள்ளனர். இதில் 2 விலையிலும் ஒரு இந்திய வீரர் பெயர் கூட இடம்பெறவில்லை. இதனையடுத்து ஒரு கோடி ரூபாய் பிரிவில் வெளிநாட்டு வீரர்களுடன் சேர்ந்து 3 இந்திய வீரர்களும் தங்கள் பெயரை பதிவு செய்துள்ளனர்.

அதன்படி ராஸ்டன் சேஸ், குசேல் பெரரா, தப்ரைஸ் சாம்சி, டேவிட் வீசி, ஹென்றிச் கிளாசன், டேரல் மிச்சல், கெயில் ஜெமிஷன், மார்ட்டின் குப்தில், மார்க் ஷாப் மேன், பிரேஸ் வெல், மைக்கேல், ஜோ ரூட், ஹென்றி கியூஸ், மோய்சஸ், முஜிபுர் ரஹ்மான், முகமது நபி, மனிஷ் பாண்டே, கேதர் ஜாதவ், மாயாங் அகர்வால் போன்ற வீரர்கள் 1 கோடி ரூபாய் அடிப்படை பிரிவில் தங்கள் பெயரை பதிவு செய்துள்ளார்கள். மேலும் வேகப்பந்து வீச்சாளரான இஷாந்த் சர்மா ஏலத்தில் தன்னுடைய பெயரை 75 லட்சம் அடிப்படை பிரிவிலும், மும்பை அணியில் இருந்து விடுவிக்கப்பட்ட உனாட்கட், இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரகானே ஆகியோர் தங்களுடைய பெயரை 50 லட்சம் அடிப்படை பிரிவில் பதிவு செய்துள்ளனர்.

Categories

Tech |