மும்பை இந்தியன்ஸ் அணியில் ஆசான வீரர்களாக வளம் வருகின்றனர் ஆல்ரவுண்டர் சகோதரர்கள் ஆன ஹர்திக் பாண்டியா மற்றும் குருநாள் பாண்டியா. பேட்டிங்கில் அதிரடி வேங்கை ஆகவும், பந்துவீச்சில் மித வேக சீமராகவும் ஜொலிக்கும் திறன்கொண்ட ஹர்திக் பாண்டியா, 2015 ஆம் ஆண்டு முதல் மும்பை அணிக்காக விளையாடி வருகிறார். இவரது மூத்த சகோதரரான குருநாள் பாண்டியா, 2016 ஆம் ஆண்டு முதல் மும்பை அணியின் இடது கை சுழற்பந்து வீச்சாளர் ஆகவும். மத்திய வரிசை அதிரடி பேட்ஸ்மேன் ஆகவும் பங்களித்து வருகிறார்.
வழமையான ஆட்டங்களை தொடர்ச்சியாக வழங்கி வருவதால் மும்பை இந்தியன்ஸ் அணியின் கோர் பிளேயர்கள் ஆகவே இருவரும் பார்க்கப்படுகின்றனர். இந்த வரிசையில் பவுலிங் பிரதர்ஸ் ஆக அசத்தி வருபவர்கள் தீபக் சகார் மற்றும் ராகுல் சகார். ஒரே வம்சாவளியைச் சேர்ந்த இவர்கள் இருவரும் உடன்பிறவா சகோதரர்கள். 2017 ஆம் ஆண்டு இருவரும் ரைசிங் சூப்பர் ஜெயின்ஸ் அணியில் விளையாடினார்.
அந்த அணி கலைக்கப்பட்ட பின்னர் தீபக் சகார் சென்னை அணிக்கும். ராகுல் சகார் மும்பை அணிக்கும் ஒப்பந்தம் செய்யப்பட்டனர். தீபக் சகார் சென்னை அணியில் பவர் பிளே ஸ்பெஷலிஸ்டாக ஜொலிக்கிறார். மறுபுறம் ராகுல் சகார் மும்பை அணியில் சூழல் சூத்திரதாரியாக அலங்கரித்து வருகிறார். இந்த பட்டியலில் வெளிநாட்டு சகோதரர்களும் உள்ளனர். நடப்பு சீசனின் சென்சேஷன் ஆக வலம் வரும் சென்னையின் சாம் கரனும் ராஜஸ்தானி டாம் கரனும் உடன்பிறந்த சகோதரர்கள்.
ஜிம்பாபே அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கெவின் கரனின் மகன்களே இவர்கள். இருபது வயதில் ஐபிஎல்லில் அறிமுகமான சாம் கரன் மிகக்குறைந்த வயதில் ஹேட்ரிக் விகெட் கிரிக்கெட் வீரர் என்ற சாதனையை படைத்தார். சாம் கரணை போலவே அவரது அண்ணன் டாம் கரனும் ஆல்ரவுண்டர் தான்.
2018 ஆம் ஆண்டு கொல்கத்தா அணியில் விளையாடி வந்த டாம்கரன் நடப்பு சீசனில் ராஜஸ்தான் அணியின் மத்திய அரசு நம்பிக்கை நட்சத்திரமாக வலம் வருகிறார். நடப்பு சீசனில் ஜொலித்து வரும் இவர்கள் மட்டுமின்றி பதான், மார்ஸ் பார்சி, மெக்கண்ணம் சகோதரர்களும் ஐபிஎல் விளையாடி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தனர்.