அடுத்த சீசன் ஐபிஎல் தொடரில் அகமதாபாத் அணியின் பயிற்சியாளராக ரவி சாஸ்திரி நியமிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது .
7-வது டி20 உலக கோப்பை தொடர் கடந்த அக்டோபர் மாதம் 17-ம் தேதி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது .இதில் நடப்பு உலக கோப்பை தொடருக்குப் பிறகு இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக உள்ள ரவிசாஸ்திரி பதவிக்காலம் முடிவடைகிறது. இதனால் அவருக்கு பதிலாக அணியின் புதிய பயிற்சியாளராக முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டுள்ளார். இதனிடையே அவர் பதவி விலகியதை தொடர்ந்து அடுத்த ஐபிஎல் போட்டியில் ஒரு அணிக்கு பயிற்சியாளராக நியமிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது .
அதன்படி அடுத்த ஐபிஎல் சீசனில் சி.வி.சி கேப்பிட்டல்ஸ் வாங்கியுள்ள புதிய அணியான அகமதாபாத் அணிக்கு ரவிசாஸ்திரி பயிற்சியாளராக நியமிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது .இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது .அதேசமயம் பந்துவீச்சு பயிற்சியாளர் பரத் அருண் , பீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர் ஆகியோரும் இந்திய அணி பயிற்சியாளர் பதவியிலிருந்து விலக இருப்பதால் ,அவர்களும் அகமதாபாத் அணிக்கு பயிற்சியாளராக பொறுப்பேற்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.