பெங்களூரில் நடைபெற்ற ஐபிஎல் 15 ஆவது சீசனுக்கான 2 நாள் மெகா ஏலத்தில் சுரேஷ் ரெய்னா உட்பட பல முன்னணி வீரர்கள் எவரும் வாங்கப்படவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.
பெங்களூரிலுள்ள ஐடிசி கார்டீனியாவில் ஐபிஎல் 15 ஆவது சீசனுக்கான 2 நாள் மெகா ஏலம் நடைபெற்றுள்ளது. இதில் மொத்தமாக 10 அணிகளும் 590 வீரர்களும் பங்கேற்றுள்ளார்கள். அவ்வாறு பங்கேற்ற 590 வீரர்களில் 147 இந்தியர்கள் உட்பட 217 பேர் ஏலமிடப்பட இருந்துள்ளார்கள்.
இதில் பங்கேற்ற அணிகள் ஏலம் விடப்பட்ட வீரர்களை போட்டி போட்டு வாங்கியுள்ளது. இந்நிலையில் சுரேஷ் ரெய்னா, ஸ்டீவன், முகமது நபி, ஷகிப், மேத்யூ, உமேஷ், முஜிப் உர் ரகுமான், ரஷீத், சாம் பில்லிங்ஸ், சாகா ஆகியோரை ஏலத்தில் எவரும் எடுக்கவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.