பெங்களூரில் நடந்த 2 நாள் ஐபிஎல் 15 ஆவது சீசனுக்கான ஏலத்தில் சிஎஸ்கே அணி ஒரு தமிழக வீரர்களை கூட எடுக்கவில்லை என்ற தகவல் ரசிகர்களிடையே மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளது.
பெங்களூரிலுள்ள ஐடிசி கார்டீனியா விடுதியில் நேற்று மற்றும் இன்று ஐபிஎல் 15 ஆவது சீசனுக்கான மெகா ஏலம் நடைபெற்றுள்ளது. இதில் மொத்தமாக பங்கேற்றுள்ள 10 அணிகள் ஒவ்வொரு வீரரையும் போட்டிபோட்டு எடுத்துள்ளது. இவ்வாறு இருக்க சிஎஸ்கே அணி இன்று மதியம் 1.30 மணி நிலவரப்படி எந்த ஒரு தமிழக வீரரையும் ஏலத்தில் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் சிஎஸ்கே அணியின் தமிழக ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளார்கள். இந்த சூழலில் தமிழக வீரர்களை அனைத்து அணிகளும் போட்டி போட்டு எடுத்து வரும் நிலையில் சிஎஸ்கே அணிக்கு அவர்கள் மீது நம்பிக்கை இல்லையா என்று கேள்வி அனைவரிடத்திலும் எழுந்துள்ளது.