Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐபில் கிரிக்கெட் போட்டி … நாளை மும்பையில் நடக்கும் போட்டியில் …சிஎஸ்கே – டெல்லி கேப்பிடல்ஸ்  அணிகள் மோதல் …!!!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி இன்று தொடங்க உள்ள நிலையில், நாளை 2வது போட்டியில் சிஎஸ்கே -டெல்லி கேப்பிடல்ஸ்  அணிகள் மோதுகின்றன.

14 வது ஐபிஎல் தொடரின்  2 வது  போட்டியானது ,நாளை மும்பையில் நடைபெறுகிறது . இந்த  2வது லீக் போட்டியில் சிஎஸ்கே – டெல்லி கேப்பிட்டல் அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டியில் சென்னை அணியில் புஜாரா, கிருஷ்ணப்பா கௌதம், ராபின் உத்தப்பா மற்றும்  மொயின் அலி ஆகிய வீரர்கள் புது வரவாக இடம்பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே அணி, 7வது இடத்தை பிடித்து, போட்டி தொடரிலிருந்து வெளியேறியது . இதனால் நடைபெறும் இந்த முதல் போட்டியில், தொடக்கத்திலிருந்தே சிஎஸ்கே அணி ,சிறப்பான தன்னுடய ஆட்டத்தை விளையாடவேண்டிய  சூழலில் உள்ளது. இந்த வருட ஐபிஎல் போட்டியில், டெல்லி அணியின் கேப்டனாக இளம் வீரரான ரிஷப் பண்ட் நியமிக்கப்பட்டார் .

இதற்கு முன் நடந்த  போட்டிகளில் , டெல்லி அணியின் கேப்டனாக இருந்த ஸ்ரேயாஸ்  அய்யர், சமீபத்தில் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் விளையாடினார். அந்தப் போட்டியில் அவர் விளையாடும் போது ,தோல்பட்டையில் அவருக்கு அடிபட்டதன் காரணமாக  ,அறுவை சிகிச்சை செய்யும் நிலை ஏற்பட்டது. இதனால் இந்த வருட ஐபிஎல் சீசனில் பங்கு பெற முடியாமல், அவர் போட்டியிலிருந்து விலகினார். இதனால் டெல்லி அணியின் கேப்டனாக ரிஷப் பண்ட் நியமிக்கப்பட்டார்.டெல்லி அணியில் இளம் வீரர்கள்  அதிகம் பேர் இடம் பெற்றுள்ளனர். எனவே  நாளை நடைபெறும் போட்டியில்,  டெல்லி அணியின் இளம் வீரர்களுக்கும்,சென்னை அணியின் அனுபவமுள்ள  வீரர்களுக்கும் இடையிலான போட்டியாக  காணப்படும்.

Categories

Tech |