Categories
கிரிக்கெட் விளையாட்டு

“விறுவிறுப்பாக நடைபெற்ற IPL ஏலம்”…. அதிக விலைபோன TOP-5 வீரர்கள் யாருன்னு தெரியுமா…? முழு விபரம் இதோ…!!

IPL கிரிக்கெட் போட்டிக்கான ஏலத்தில் அதிக விலை கொடுத்து ஏலம் எடுக்கப்பட்ட 5  கிரிக்கெட் வீரர்களின் பெயர்கள் வெளியாகியுள்ளது.

சென்னையில் நேற்று முன்தினம் IPL கிரிக்கெட் போட்டிக்கான ஏலம் எடுக்கும் பணி மும்மரமாக நடைபெற்றது. இந்த ஏலத்தில் ஆல்ரவுண்டர்களையே அதிக கவனத்துடன்  IPL அணி குழுவினர் தேர்வு செய்தனர். இதில் முதலிடத்தில் தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த கிரிஸ் மோரிஸை பஞ்சாப் அணி 16. 5 2 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது. அவருக்கு அடுத்து 15 கோடி ரூபாய்க்கு நியூசிலாந்து அணியின் கைல் ஜேம்சனை பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி ஏலம் எடுத்துள்ளது.

அவருக்குப் பின்பு மூன்றாவதாக ஆஸ்திரேலிய அணியின் க்ளான் மெக்ஸ் வேலை பெங்களூரு அணி 14.2 5 கோடி ரூபாய்க்கும்,  நான்காவதாக 14 கோடி ரூபாய்க்கு ஆஸ்திரேலியாவின் இளம் வீரரான ஜெய் ரிச்சர்ட்டனை பஞ்சாப் அணி ஏலம் எடுத்துள்ளது. இந்த ஏலப்பட்டியலில் ஐந்தாவதாக  கிருஷ்ணப்பா கௌதமை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 9 கோடியே 25 ரூபாய்க்கும் ஏலம் எடுத்துள்ளது.

Categories

Tech |