Categories
கிரிக்கெட் விளையாட்டு

வரலாற்றில் முதல்முறையாக… இந்த நாட்டைச் சேர்ந்த வீரர் ஐபிஎல்லில் விளையாடுகிறார்…!!

இவருக்கு பதிலாக அமெரிக்காவைச் சேர்ந்த முகமது ஹசன் அலி கான் (29) என்ற வேகபந்து வீச்சாளர் கொல்கத்தா அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.. இவரை அணியில் சேர்க்க ஐ.பி.எல். நிர்வாகத்தின் அனுமதிக்காக கொல்கத்தா அணி காத்திருக்கின்றது.

ஐ.பி.எல். நிர்வாகம் அலிகானுக்கு அனுமதி கொடுத்தால் ஐ.பி.எல்.லில் விளையாட இருக்கும் முதல் அமெரிக்க வீரர் என்ற பெருமை அவருக்கு கிடைக்கும்.. இந்த சீசனில் கரீபியன் லீக் 20 ஓவர் தொடரில் கிரன் பொல்லார்ட் கேப்டனாக இருந்த டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியில் அலிகான் ஆடி, 8 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார்.. அதுமட்டுமில்லாமல் இவர் யார்க்கர் பந்து வீசுவதில் மிகவும் தேர்ச்சி பெற்றவர் ஆவார்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தொடக்க ஆட்டத்தில் 23ஆம் தேதி மும்பை அணியுடன் மோதுகிறது.. கடந்த ஐ.பி.எல். தொடரிலேயே கொல்கத்தா அணி நிர்வாகம் அலிகானை எடுக்க முயற்சி செய்தது. ஆனால் முடியவில்லை.. தற்போது அனுமதி கிடைத்தால் கொல்கத்தா வலுவாக காணப்படும் என்பதில் சந்தேகமில்லை.. அப்போது அவர் கனடா 20 ஓவர் போட்டிகளில் மிகச் சிறப்பாக பந்து வீசி அனைவரது கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்தார்.

இதனைத்தொடர்ந்து அலிகானின் அபார திறமையை கண்டு வியந்த வெஸ்ட் இண்டீஸ் வீரர் டுவைன் பிராவோ அவரை கரீபியன் லீக் தொடரில் அறிமுகப்படுத்தினார்.. கடந்த சீசனில் அலிகான் கயானா அமேசான் வாரியர்ஸ் அணிக்காக விளையாடி 12 விக் கெட்டுகளை சாய்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |