ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் விக்கெட் கீப்பிங் ஆலோசகரான கிரண்மோரேவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது .
2021 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் போட்டி வருகின்ற 9ஆம் தேதி தொடங்கி மே 30-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தப் போட்டியானது மும்பை ,சென்னை ,கொல்கத்தா, டெல்லி, பெங்களூர், அகமதாபாத் போன்ற 6 நகரங்களில் நடைபெற உள்ளது. இந்தப் போட்டிக்காக அனைத்து அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் இந்தியாவில் கொரோனா தொற்று வேகம் எடுக்க தொடங்கியுள்ளது .கடந்த சில நாட்களுக்கு முன் ஐபிஎல் போட்டியில் பங்கு பெற்றுள்ள டெல்லி அணியின் அக்ஷர் பட்டேல், கொல்கத்தா அணியின் நிதிஷ் ராணா மற்றும் ஆர்சிபி அணியின் படிக்கல் ஆகிய மூன்று வீரர்களும் தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதில் கொல்கத்தா அணி வீரரான நிதிஷ் ராணா தொற்றியிலிருந்து குணமடைந்து, மீண்டும் அணியுடன் இணைந்து பயிற்சியை மேற்கொண்டுள்ளார்.
ஐபிஎல் வீரர்கள் மட்டுமல்லாது ,அங்கு பணி புரியும் ஊழியர்கள், மைதான ஊழியர்கள் ,அணியின் பயிற்சியாளர்கள் என வரிசையாக பலரும் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போது மும்பை இந்தியன்ஸ் அணியின் விக்கெட் கீப்பிங் ஆலோசகரும், இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பருமனா கிரண்மோரே (வயது 58) கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். இதுபற்றி மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தியில் , தொற்றால் பாதிக்கப்பட்ட கிரண்மோரே மருத்துவரின் ஆலோசனைப்படி தனிமைப் படுத்தி கொண்டார் என்றும், மருத்துவர்கள் கிரண்மோரேவின் உடலை கண்காணித்து வருவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.