Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐபிஎல்-ல் என்ட்ரியாகும் பாலிவுட் நட்சத்திர ஜோடி ….! புதிய அணியை வாங்க திட்டம் ….!!!

15-வது சீசன் ஐபிஎல்-லில் கூடுதலாக 2 புதிய அணிகளுக்கான ஏலத்தில் பாலிவுட் நட்சத்திர ஜோடியான ரன்வீர் சிங் – தீபிகா படுகோனே ஜோடி ஆர்வம் காட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது .

ஐபிஎல் டி20 போட்டி கடந்த 2008ஆம் ஆண்டிலிருந்து தொடங்கி நடைபெற்று வருகிறது. பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர்கள் ஐபிஎல் தொடரில் விளையாடுவதால் இதற்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அதோடு ஐபிஎல் தொடரில் 8 அணிகள் மட்டுமே பங்கேற்று வந்த நிலையில் வருகின்ற ஐபிஎல் சீசனில் இருந்து கூடுதலாக இரு புதிய அணிகள் சேர்க்கப்படுகிறது. இதனிடையே அடுத்த சீசனுக்கான ஐபிஎல் ஏலம் நடைபெற உள்ளது. அதோடு கூடுதலாக 2 அணிகள் சேர்க்கப்படுவதன்  மூலமாக பிசிசிஐ-க்கு ரூபாய் 7000 கோடி வருமானம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே இரு புதிய அணிகளில் ஒன்று உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்தை கொண்டுள்ள அகமதாபாத் பெயரில் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இந்த புதிய ஐபிஎல் அணிக்கான ஏல விண்ணப்பம் பெற  கடைசி நாள் அக்டோபர் 20-ஆம் தேதி வரை பிசிசிஐ நீடித்திருந்தது. இந்த 2 அணிகளை வாங்குவதற்கான ஏலம் வருகின்ற அக்டோபர் 25-ஆம் தேதி துபாயில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற உள்ளது. எனவே இந்த புதிய ஐபிஎல் அணிகளை வாங்க அதானி குழுமம், மான்செஸ்டர் யுனைடெட் கிளப்  ஆகிய முன்னணி நிறுவனங்கள் போட்டி போட்டு வருகின்றன. அந்த வரிசையில் பாலிவுட்டில் நட்சத்திர ஜோடியான ரன்வீர் சிங் – தீபிகா படுகோனே ஜோடி ஐபிஎல்-லில் புதிய அணியை வாங்க உள்ளனர். இதற்கு முன்பாக ஐபிஎல் பாலிவுட் நட்சத்திரங்களான நடிகர் ஷாருக்கான் ,நடிகை பிரீத்தி ஜிந்தா ஆகிய இருவரும் கொல்கத்தா மற்றும் பஞ்சாப்  அணிகளில் உரிமையாளர்களாக இருக்கும் நிலையில், தற்போது இந்தப் பட்டியலில் ரன்வீர் சிங்- தீபிகா படுகோனே ஜோடி இணைகின்றனர்.

Categories

Tech |