ஐபிஎல் 2021 சீசனின் இரண்டாவது பகுதி ஆட்டம் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் கொல்கத்தா அணியில் இடம்பெற்றிருந்த இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ்-க்கு பயிற்சியின் போது முழங்காலில் காயம் ஏற்பட்டது .இதனால் ஐபிஎல் தொடரில் இருந்து விலகி நாடு திரும்பியுள்ளார்.
இதுவரை குல்தீப் யாதவ் இந்திய அணிக்காக 7 டெஸ்டிலும் , 65 ஒருநாள் மற்றும் 23 டி20 போட்டிகளில் விளையாடி 174 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார்.சமீபத்தில்தான் இவருக்கு முழங்காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு அதிலிருந்து மீண்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது .