ஐபிஎல் போட்டியில் நான் விளையாட விரும்பும் ஒரே அணி கொல்கத்தா மட்டும் தான் என சுனில் நரைன் கூறியுள்ளார்.
15-வது சீசன் ஐபிஎல் தொடரில் லக்னோ ,அகமதாபாத் 2 புதிய அணிகள் சேர்க்கப்பட்டு மொத்தம் 10 அணிகள் விளையாட உள்ளது .இந்நிலையில் ஏற்கனவே உள்ள 8 அணிகள் தங்கள் அணியில் தக்க வைக்கப்படும் 4 வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் சுனில் நரைன், வெங்கடேஷ் ஐயர் , ஆண்டரே ரஸல் ,வருண் சக்கரவர்த்தி ஆகிய வீரர்கள் தக்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் ஐபிஎல்-லில் நான் விளையாட வேண்டும் என நினைக்கும் ஒரே அணி கொல்கத்தா மட்டும்தான் என வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஆல் ரவுண்டர் சுனில் நரைன் கூறியுள்ளார் .
இதுகுறித்து அவர் கூறும்போது,” நான் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன். ஐபிஎல் தொடரில் நான் விளையாட விரும்பும் ஒரே இடம் இதுதான். மேலும் கேகேஆர், டிகேஆர் அல்லது இந்த உரிமையாளர்கள் வைத்திருக்கும் அணி எதுவாக இருந்தாலும் அவர்களுக்காக விளையாட விரும்புகிறேன் .ஏனெனில் கடந்த 10 வருடங்களாக நான் கொல்கத்தா அணிக்காக விளையாடி வருகிறேன் .இதனால் நான் கொல்கத்தா அணிக்கு விசுவாசமாக இருக்க விரும்புகிறேன். மேலும் அடுத்த சீசனில் மீண்டும் ஈடன் கார்டனில் விளையாட காத்திருக்கிறேன்” இவ்வாறு அவர் கூறியுள்ளார்