மும்பையில் இன்று நடைபெறும் , ஐபிஎல் போட்டியின் 2-வது லீக் ஆட்டத்தில், சிஎஸ்கே- டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதிக் கொள்கின்றன.
2021 ஐபிஎல் சீசனுக்கான போட்டி நேற்று சென்னையில் தொடங்கியது. சென்னையில் நடைபெற்ற முதல் போட்டியில் ஆர்சிபி அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மும்பையில் இன்று நடைபெறும் 2வது லீக் ஆட்டத்தில், சிஎஸ்கே- டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதுகின்றன. கடந்த சீசனில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின், கேப்டனாக இருந்த ஸ்ரேயாஸ் அய்யர் சமீபத்தில், நடந்து முடிந்த ஒரு நாள் கிரிக்கெட் தொடர் போட்டியில் ,விளையாடிய போது அவருக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. இதனால் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டதால் , இந்த சீசன் ஐபிஎல் தொடரில் பங்குபெற முடியாமல் விலகினார். அவருக்கு பதிலாக இளம் வீரரான ரிஷப் பண்ட் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார் .
டெல்லி கேப்பிடல்ஸ் அணியை, பொருத்தவரை பேட்டிங் மற்றும் பவுலிங் சிறப்பாக காணப்படுகிறது. ஷிகர் தவான், பிரித்வி ஷா, ரஹானே, ஸ்டீவன் சுமித் மற்றும் அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் ஆகியோர் பேட்டிங்கில் சிறந்து விளங்கும் ஆட்டக்காரர்களாவர் . அதோடு பவுலிங்கில் வேகப்பந்து வீச்சாளர்களான இஷாந்த் ஷர்மா, உமேஷ் யாதவ், கிறிஸ்வோக்ஸ் மற்றும் சுழல்பந்து வீச்சில் ஆர்.அஸ்வின், அமித் மிஸ்ரா ஆகிய வீரர்கள் டெல்லியில் அணியில் இடம்பெற்றுள்ளனர் . இதைத்தொடர்ந்து மூன்று முறை சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த சீசனில் நடந்த ஐபிஎல் போட்டியில் ‘ப்ளே ஆப் ‘ சுற்றுக்கு தகுதி பெறாமல், 7 வது இடத்துக்கு பின் தள்ளப்பட்டுள்ளது.இது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதன்காரணமாக இந்த கசப்பான சம்பவத்திலிருந்து ,சென்னை அணி மீண்டு வர வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
சிஎஸ்கே அணியின் பேட்டிங்கில், சுரேஷ் ரெய்னா ,ராபின் உத்தப்பா, மொயின் அலி ,கேப்டன் டோனி , சாம் கர்ரன் , ருதுராஜ் கெய்க்வாட் போன்ற வீரர்கள் பேட்டிங்கில் சிறந்து விளங்க கூடியவர்கள். அதோடு பவுலிங்கில் ரவீந்திர ஜடேஜா ,ஷர்துல் தாகூர் ,தீபக் சாஹர் ஆகியோர் பவுலிங்கில் சிறந்து விளங்குகின்றன. ஆனால் தற்போது வேகப்பந்து வீச்சாளரான நிகிடி, சிஎஸ்கே அணியில் தாமதமாக இணைந்துள்ளதால், அவர் இன்று நடைபெறும் முதல் போட்டியில் விளையாட முடியாது.இதுவரை நடைபெற்ற ஐபிஎல் தொடர் போட்டிகளில், சிஎஸ்கே – டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் 23 போட்டிகளில் நேருக்கு நேர் மோதி உள்ளன. அதில் சிஎஸ்கே அணி 15 முறையும் ,டெல்லி அணி 8 முறையும் வெற்றியை கைப்பற்றியுள்ளனர். மும்பையில் மைதானத்தில் இன்று இரவு 7.30 இரு அணிகளுக்கிடையே போட்டி தொடங்குகிறது .