கடந்த 2ஆம் தேதியன்று, டெல்லியில் நடைபெற்ற ஐபில் போட்டியில், சூதாட்டதில் ஈடுபட்டதாக 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
14வது ஐபிஎல் தொடர் கடந்த மாதம் 9ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வந்தது. நிலையில் ஆனால் அணியின் வீரர்களுக்கு ,தொற்று பாதிப்பு ஏற்பட்டதால், ஐபிஎல் போட்டியை காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்தது. இந்நிலையில் கடந்த 2ஆம் தேதியன்று நடைபெற்ற ராஜஸ்தான் – ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான போட்டியில், சட்டவிரோதமாக 2 பேர் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக , சந்தேகத்தின் பெயரில் போலீசார் கைது செய்தனர்.
விசாரணையின் போது , இருவரும் போலி அடையாள அட்டையை பயன்படுத்தி, வீட்டு பராமரிப்பு ஊழியர்கள் போல் நடித்து மைதானத்திற்குள் நுழைந்தது தெரியவந்தது. எனவே சூதாட்டத்தில் ஈடுபட்ட இருவரையும் போலீசார் மன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு , 5 நாட்கள் போலீஸ் காவலில் எடுக்கப்பட்டன. தொடர்பாக போலீசார் கிரிக்கெட் வாரியத்தின் ஊழல் தடுப்பு பிரிவுக்கு தகவல் தெரிவித்துள்ளன. கைது செய்யப்பட்ட இருவரையும், போட்டியின்போது 45 நிமிடங்கள் தொடர்ந்து , கண்காணித்த பிறகே இருவரையும் பிடித்ததாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு இருவரும் சூதாட்டத்தில் ஈடுபட்டதை, ஒப்புக் கொண்டு உள்ளதாகவும் அவர்கள் கூறினர்.