ஐபிஎல் தொடரில் ,ஆர்சிபி அணியின் கேப்டனான விராட் கோலியை ,பற்றி சரண்தீப் சிங் கருத்து தெரிவித்துள்ளார்.
இதுவரை நடந்த ஐபிஎல் போட்டித் தொடர்களில், விராட் கோலியின் ஆர்சிபி அணி ,ஒருமுறை கூட வெற்றி பெற்றதில்லை . இதனை காரணமாக வைத்து இந்திய அணியின் கேப்டனாக வழிநடத்தி வரும் விராட் கோலியை, மாற்ற வேண்டும் என்ற கருத்து காணப்படுகிறது. இதற்கு முக்கிய காரணமாக மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனான ரோகித் சர்மா 5 முறை தொடர்களை கைப்பற்றி வெற்றி பெற்றுள்ளார். இதனை முன்வைத்து விராட்கோலி இந்திய கேப்டன் பதவியில் இருந்து விலகவேண்டும் என்று கருத்து பரவலாக காணப்படுகிறது. இந்த கருத்திற்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் செயலாளரான சரண்தீப் சிங் விளக்கம் அளித்துள்ளார்.
அதில் ,அணியின் கேப்டன் தனது ஆட்டத்தை சிறப்பாக விளையாடாமல் இருந்தால், அப்போது கேப்டன் பதவியை பிரித்துக் கொடுக்கலாம். ஆனால் விராட் கோலி அனைத்து போட்டிகளிலும், 50க்கு மேலாக சராசரியை வைத்துக் கொண்டுள்ளார். ஆனால் ஐபிஎல் தொடரில் வெற்றி பெறவில்லை ,என்பதை காரணமாக வைத்து, இந்திய அணியின் கேப்டன் பதவியிலிருந்து ,அவரை நீக்க முடியாது என்றும், அவர் அணியில் இல்லாத நேரத்தில், ரோஹித் சர்மா, அவர் பொறுப்பை ஏற்றுக்கொண்டு ,இந்திய அணியை வழி நடத்தி வருகிறார். இதனை கருத்தில் கொண்டு விராட் கோலியை இந்திய அணியின் கேப்டன் பதவியிலிருந்து , மாற்ற முடியாது என்று அவர் தெரிவித்தார்.